*ஸ்பீடுக்கு பெயர் போன ஹரி, ஷூட்டிங் ஸ்பாட்டில் யாராவது வேலைக்கு இடையூறாகப் பேசினால் டென்ஷனாகி விடுவாராம். ‘பூஜை’ படப்பிடிப்பில் தனது செல்போன் அழைப்புக்கு மரியாதை கொடுத்த ஸ்ருதியிடமும் ஹரி தனது கர்ஜனையைக் காட்ட... அதிர்ச்சியில் உறைந்து விட்டாராம் ஸ்ருதி.

*‘பரதேசி’யில் போல்டான கேரக்டரில் நடித்த தன்ஷிகாவிடம், ‘‘அஜித் படத்தில் ஒரு ரோல் இருக்கு. வில்லி கேரக்டர்தான்... பரவாயில்லையா’’ என சம்மதம் கேட்க, ‘வில்லி வேடம்தான் ரொம்ப நல்லாவே ரீச்சாகும்’ என தலையாட்டினாராம்.
அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் டைரக்டர் செய்யும் படத்தில் ரஜினிக்கு அதிபயங்கரமான சண்டைக் காட்சிகளோ, கத்தியோ, ரத்தமோ எதுவும் இல்லையாம். கடினமான மூவ்மென்ட்களைக் குறைத்து, எளிமையாக ஆக்டிங்கில் கலக்க முடிவெடுத்துவிட்டார். நடிச்சுப் பார்த்து நாளாச்சே சார்!

*கொஞ்ச நாட்களுக்கு தமிழ்ப் படங்களை ஒப்புக்கொள்வதை நிறுத்திவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். மும்முரமாக ஹாலிவுட் படங்களுக்கு இசையமைப்பதும் சில தனிப்பட்ட ஆல்பம் வேலைகளுமே காரணம். இதில் எப்போதும் மணி ரத்னத்திற்கு மட்டும் விதிவிலக்கு.
*‘‘எல்லாம் போதும்... இப்போதாவது திருமணத்திற்கு சம்மதித்து விடு’’ என ஒரே சமயத்தில் அம்மா, தங்கை, அப்பா கெஞ்ச, ஓகே சொல்லி விட்டார் சிம்பு. இனி நிச்சயமாக காதல் இல்லையாம். கல்யாணத்திற்கு பிறகே காதலாம். ஊர் ஊராக சொந்தத்தில் பெண் தேடுகிறார் டி.ஆர்.
‘நாடோடிகள்’ அபிநயா, தமிழில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத வருத்தத்தில் இருந்தார். ஆனால் மலையாளப் படங்களில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார். ‘ஒன் பை டூ’ படத்தில் பஹத் பாசிலின் மனைவியாக நடித்துவரும் அபி, இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
*கொஞ்சம் கொஞ்சமாக ஜி.வி.பிரகாஷின் இடத்தைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார் அனிருத். இதற்கு ஜி.வியின் நடிப்பு ஆசையும் ஒரு காரணம். யுவன் இடமும் கொஞ்சம் சரிந்துவிட்டது. பாடல்களைக் கொடுக்கிற டைமிங் மிஸ் ஆவது காரணம். மாமா, அப்பாவை பார்க்க மாட்டீங்களா பிரதர்ஸ்?
*வடிவேலு, பிரபுதேவாவுடன் அடிக்கடி பேசிக்கொண்டு இருக்கிறார். ஆனாலும் பிரபு இப்போது இரண்டு படங்களில் பிஸி என்பதால், வேறு படத்தில் ஹீரோவாக நடிக்க முடிவு செய்திருக்கிறார் வடிவேலு. ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ பார்ட் 2 கைவசம் ரெடியாக வைத்திருக்கும் சிம்புதேவனும் விஜய்க்காக ரெடியாகிறார். ஆகவே வடிவேலு ‘இம்சை அரசனாக’ காத்திருக்க வேண்டியதாகிறது.
*‘ஏழாம் அறிவு’ ஸ்கிரிப்ட்டை கொஞ்சம் சரி செய்யவில்லை என்ற லேசான வருத்தம் சூர்யாவுக்கு இருந்தது. இப்போது காலம் அதை சரி செய்துவிட்டது. மறுபடியும் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து வேலை செய்ய ஆர்வமாக இருக்கிறார் சூர்யா. ஆனால் அவரோ விஜய், அக்ஷய்குமார் என புக் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
*‘எங்க வீட்டு பிள்ளை’யை விஜய்யை வைத்து ரீமேக் செய்யலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய் நிறைய அதைப் பற்றி பேசியிருப்பதால்தான் இப்படி ஒரு ஐடியா தோன்றியிருக்கிறது. இரண்டு மூன்று இயக்குநர்கள் ‘எங்க வீட்டு பிள்ளை’யையே புது ஸ்கிரிப்டாக ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
*‘கோலி சோடா’ வெற்றி, விஜய் மில்டனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளது. மில்டனின் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கப் போகிறாராம். ஹீரோயின் யார் என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை.
*எலெக்ஷன் முடிந்த கையோடு ‘கோச்சடையான்’ படத்தை நரேந்திர மோடிக்கு போட்டுக் காட்டப் போகிறார்கள். சௌந்தர்யா டைரக்டர் ஆனதைக் கேள்விப்பட்டு மோடி ரொம்பவே பாராட்டினாராம். அப்போது, ‘‘இந்தப் படத்தை உங்களுக்கு கண்டிப்பாக போட்டுக் காட்டுகிறேன்’’ என சொல்லி இருக்கிறார் ரஜினி. எங்களுக்கும் காட்டுங்க பாஸ்!
*‘‘எப்போ வேண்டுமானாலும் கூப்பிடுங்கோ’’ என பாடுவதற்கு ரெடியாகக் காத்திருக்கிறார் ரம்யா நம்பீசன். போக வர ஃப்ளைட் டிக்கெட் போதுமாம். பாடுவதற்கு சம்பளத்தை அக்கவுன்ட்டில் போட்டால்தான் கேரளாவிலிருந்து புறப்படுகிறார் ரம்யா.
*‘அரிமாநம்பி’, ‘இரும்புகுதிரை’, ‘வை ராஜா வை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ எனஅரை டஜன் படங்களில் நடித்து வரும் ப்ரியா ஆனந்த், புதிதாக போட் டோ ஷூட் பண்ணியிருக்கிறார். தமிழ்ப் பாரம்பரியத்தை பறை சாற்றுவது போல் புடவையை மட்டும் காஸ்ட்யூமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்.
‘நெடுஞ்சாலை’ படத்தை இயக்கிய கிருஷ்ணா, உடனடியாக அடுத்த படத்தை ஆரம்பிக்கிறார். பாரதிராஜாவின் ஆஸ்தான கதாசிரியரான ஆர்.செல்வராஜ்தான் கதை. தென்மாவட்டத்து கதையான இதில் சிம்பு அல்லது ஜீவா நடிக்கலாம் என்கிறார்கள்.
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் கன்னடத் துக்கும் தாவுகிறார் அனுஷ்கா. ‘ஜக்குதாதா’ என்ற படத்தில் தர்ஷன் ஜோடியாக
தரிசனம் தரவுள்ளார்.
*வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்காக நாயகி வேட்டையில் ஈடுபட்ட இயக்குனர், ஏகப்பட்ட மும்பை நடிகைகளின் பெயரைச் சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் ரிஜெக்ட் செய்த சூர்யா, நயன்தாரா பெயரை டிக் அடித்திருக்கிறார்.