ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்



ஷ்ரத்தா கபூர் தன் உதவியாளர்களை குடும்பத்தில் ஒருவர் போல பார்த்துக் கொள்கிறார். அவரது மேனேஜர், ஹேர் ஸ்டைலிஸ்ட், மேக்கப் மேன் என எல்லோரையும் ‘அண்ணா’, ‘அக்கா’ என உறவுமுறை சொல்லியே அழைக்கிறார். ஷூட்டிங்கிற்கு அவரது குடும்பத்தினர் உதவிக்கு வர முடியாத நாட்களில், இவர்களே ஷ்ரத்தாவை பரிவோடு பார்த்துக் கொள்கிறார்கள்.

சோனாக்ஷி சின்ஹா தனிமையிலும் சோகத்திலும் இருக்கிறார். அவரது அப்பா சத்ருகன் சின்ஹா, பீகாரின் பாட்னா தொகுதியில் பி.ஜே.பி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அப்பாவுக்கு வாக்கு சேகரிக்க அம்மா பூனம், இரட்டை சகோதரர்கள் என எல்லோரும் போய்விட, மும்பையில் தனியாக இருக்கிறார் சோனாக்ஷி. ‘‘ஷூட்டிங்கில் பிஸி. இல்லாவிட்டால் அப்பாவுக்காக நானும் போய் ஓட்டு கேட்டிருப்பேன்’’ என்கிறார்.

எம்மா ஸ்டோன் வித்தியாசமான நடிகை. மற்றவர்கள் போல அடிக்கடி பேட்டி கொடுப்பதில்லை. ‘‘சொல்லுக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பவள் நான். எதைச் சொன்னாலும், அதைப் பின்பற்ற வேண்டும். அதனால்தான் அளவோடு பேசுகிறேன்’’ என்கிறார் அவர்.

சுஷ்மிதா சென் நான்கு ஆண்டுகளாக படங்கள் எதிலும் நடிக்கவில்லை. நிகழ்ச்சிகள், மேடைகளில் தோன்றுவதோடு சரி! இந்த ஆண்டு தன் விரதத்தைக் கலைத்து மீண்டும் மேக்கப் போடுகிறார் அவர். முதல்முறையாக தாய்மொழியான பெங்காலி படம் ஒன்றில் அவர் நடிக்கிறார். பெண் இயக்குனர் ரூபாலி குஹாவின் படம். அதோடு, விளம்பரப் பட இயக்குனர் பிரஹலாத் காக்கர் இயக்கும் முதல் இந்திப் படத்திலும் அவர்தான் ஹீரோயின்.

ஏஞ்சலினா ஜோலி நடிப்பதற்கு பிரேக் விட்டு, ஒரே ஒரு படத்தை டைரக்ட் செய்தார். அதிலிருந்து அவரிடம் நிறைய மாற்றங்கள். ‘‘நடிகையாக நான் பெரும்புகழை அனுபவித்து விட்டேன். ஆனால் இப்போது எனக்கு கேமராவுக்குப் பின்னால் நிற்கவே பிடிக்கிறது. சொல்ல வேண்டிய கதைகள் நிறைய இருக்கின்றன’’ என்கிறார்.