
காதல் சுற்றுலா உலக வரைபடத்தைச் சுற்றி
நீ வண்ணக் கோலமிட்டுக்
கொண்டிருந்தாய்
அப்பொழுதுதான்
முதல்முறையாக சுற்றிப்பார்த்தேன்
உலகத்தை
அன்புகிருஷ்ணன், சென்னை.
ஓட்டம்குதித்துக்
கால் உடைந்தும்
ஓடியது அருவி
- நா.கி.பிரசாத், கோவை.
கவன ஈர்ப்புசம்பிரதாய விசாரிப்புகள்
சப்தச் சிரிப்புகள்
புகைப்படக்காரருடன்
நொடிப்பொழுது நட்பு
மேடைப் பிரசங்க அரட்டை
சமீபத்தில் சந்தைப்படுத்திய
புதிய ஆடைகள்
மின்னல் நகைகள்
அறுசுவைக் குறைகள் பற்றிய
ஆதங்க வெளிப்பாடுகள்...
இந்த மனிதர்களுக்குத்தான்
தங்கள் இருப்பை நிலைநாட்ட
எத்தனை கருவிகள்!
கல்யாண வீடு களை கட்டியது.
- மா.பாரி, திருச்சி
தாகம் தாகங்களை
பலர் தந்திரங்களால்
தீர்த்துக்கொள்கின்றனர்
சிலர் தத்தளித்து
தீர்த்துக்கொள்கின்றனர்.
- கவி கண்மணி, கட்டுமாவடி.
கடவுள்நடை சாத்திவிட்ட வருத்தத்தில்
வீடு திரும்பியவனை
குழந்தை வரவேற்றது
கடவுளின் உருவில்!
- சிவபாரதி, திருவாரூர்.