ஜோக்ஸ்




‘‘என்னய்யா இது... இந்த குற்றப் பத்திரிகையில ‘பக்தி ஸ்பெஷல்’னு போட்டிருக்கு?’’
‘‘நீங்க கோயில் சொத்தை கொள்ளையடிச்சதை ஒண்ணா தொகுத்திருக்காங்களாம் தலைவரே..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடியா இருக்கா..?’’
‘‘எல்லாம் இருக்கு டாக்டர்! ஆனா பேஷன்ட்டுதான் இல்லை...’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘தலைவர் ஏன் அந்த நிருபரை கன்னாபின்னான்னு திட்டறார்?’’
‘‘நீங்க இதுவரை செஞ்சதுலயே மறக்க முடியாத ஊழல் எதுன்னு கேட்டுட்டாராம்..!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘மும்பையிலிருந்து வந்த அந்த தமிழ்ப்பட கதாநாயகி என் கனவுல வந்தாங்க...’’
‘‘என்ன சொன்னாங்க..?’’
‘‘அவங்க கூட டப்பிங் ஆர்ட்டிஸ்ட் வரல... அதனால என்ன சொன்னாங்கன்னு தெரியல!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘தலைவர் ஏன் கோபமா இருக்கார்..?’’
‘‘ஒரு குற்றப்பத்திரிகையை எழுத்து கூட்டிப் படிக்கிறதுக்கு முன்னாடியே இன்னொண்ணு குடுத்துடறாங்களாம்...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

ஸ்பீக்கரு...
‘‘எதிரே அமர்ந்திருக்கும் ஐந்து தொண்டர்களுக்கும், அருகிலுள்ள டாஸ்மாக் பாரில் குடித்துக் கொண்டிருக்கும் ஐந்நூறு தொண்டர்களுக்கும் என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்...’’
- ஆர்.பி.சுந்தரி, பூனாம்பாளையம்.

‘‘ரெண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்தும் தலைவருக்கு உடம்பு வியர்க்கலை...’’
‘‘அப்புறம்..?’’
‘‘வீட்ல இன்கம்டாக்ஸ் ரெய்டு நடக்கப் போகுதுன்னு சொன்னதும் குப்புன்னு வியர்த்துடுச்சு...’’
- ஜே.தனலட்சுமி, கோவை.