ஜோக்ஸ்




‘‘தன் மேல ஷூ விழுந்த பின்னாலும் தலைவர் எதையோ எதிர்பார்க்கறாரே... என்னது?’’
‘‘அடுத்ததா சாக்ஸ் வீசுவாங்களான்னு பார்க்கறார்..!’’
- கே.ஆனந்தன், பி.பள்ளிப்பட்டி.

4‘‘தூக்கத்துல இவர் நடிகைங்க பேரைச் சொல்லி உளர்றார்... ட்ரீட்மென்ட் குடுங்க டாக்டர்!’’
‘‘இங்கே அட்மிட் பண்ணா நர்சுங்க பேரைச் சொல்லி உளறுவாரு... பரவாயில்லையா?’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

4‘‘உங்க படத்தைப் போட்டா தியேட்டர்ல பெருக்கற பொம்பளைங்க எக்ஸ்ட்ரா பணம் கேட்கறாங்க...’’
‘‘ஏன்..?’’
‘‘உங்க படம் ஒரே குப்பையா இருக்காம்..!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

4‘‘கல்யாணம்ங்கறது ஆயிரம் காலத்துப் பயிர்...’’
‘‘அப்ப காதல்ங்கறது குறுவை சாகுபடியா தரகரே?’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘எங்க தலைவர் அரசியல்ல ஒவ்வொரு அடியையும் பார்த்து தான் வைப்பாரு...’’
‘‘அதுக்காக, நடந்தே சட்டசபைக்கு போறேன்னு மூணு நாள் ஆகியும் வந்து சேரலைன்னா என்ன அர்த்தம்..?’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

4‘‘நம்ம தலைவர்கிட்ட ‘உங்க வீட்ல யாருக்காவது சுகர் இருக்கா’ன்னு டாக்டர் கேட்டதுக்கு என்ன யோசனை பண்றாரு..?’’
‘‘தலைவருக்கு ரெண்டு, மூணு வீடு இருக்குதே... அதான்!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

4‘‘அந்த கண் டாக்டர் கிட்ட மட்டும் ஏன் இவ்வளவு கூட்டம்..?’’
‘‘நாலு நர்ஸை வரிசையா நிறுத்தி, யார் கலரா இருக்காங்கன்னு டெஸ்ட் வைப்பாராம்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.