நயம்படப்பேசு

நாடே வறட்சில இருக்கு; ஆனா புரட்சிக்கு மட்டும் பஞ்சம் இல்ல. துப்பாக்கி கொண்டு புரட்சி, நகைக்கடைல புரட்சி, நடுத்தெருவுல புரட்சி. நீங்களும் 30 நாளில் புரட்சியாளர் ஆவது எப்படி?

*  முதலில் உடம்பை இறுக்கிப்பிடிக்கும் அளவிற்கு நாலஞ்சு டி-ஷர்ட்கள் தள்ளுபடி விலையில் வாங்கிக்கொள்ள வேண்டும், முக்கியமாக கறுப்பு கலரில்! அந்த டி-ஷர்ட்களில் சே குவேரா படமோ, தந்தை பெரியார் படமோ போட்டிருந்தால் இன்னமும் சிறப்பு. 5 ரூபா அதிகம் கொடுத்து பேரம் பேசாமல் வாங்கலாம்.

*  ஸ்கூல் ஆண்டுவிழாவோ, ஆட்டோல புடவைக்கடை விளம்பரமோ... மைக்கு மட்டும் கிடைச்சுட்டா, கழுத்து நரம்பு புடைக்க கத்திக் கத்தி பேசணும். ஒவ்வொரு வாக்கியத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் ‘என் மக்களே’, ‘என் தமிழினமே’ போன்ற வார்த்தைகளை சேர்த்து ‘ஏச’ வேண்டும்; அவ்வ்வ்... மன்னிக்கவும், ‘பேச’ வேண்டும்.

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:
‘‘நைட்டு ஓவரா சரக்கு அடிச்சியா என் தமிழினமே?’’
‘‘என் மக்களே, சாப்பிட்டுட்டு இலைய எங்க போடுறது?’’
‘‘தமிழினமே, கை கழுவ சொம்புல தண்ணி தா!’’

*  தமிழ் வார்த்தைகளில் கிரந்தம் தவிர்க்க வேண்டும். அதாவது, ‘எங்க அக்கா ஜோதிலட்சுமி’ன்னு சொல்லக்கூடாது; ‘எங்க அக்கா சோதிலட்சுமி’ன்னு சொல்லணும்.

*  ‘குணா’ கமல் கடிதத்துல ‘மானே’, ‘தேனே’ன்னு அங்கங்க போட்ட மாதிரி, நீங்களும் பேசறப்போ அங்கங்க ‘வெறி நாய்களே’, ‘சொறி நாய்களே’, ‘குத்துவேன்’, ‘கொல்லுவேன்’னு போட்டுக்கணும்.

*  பேருக்கு முன்னால நமக்கு புடிச்ச கலர் தமிழனா போட்டுக்கணும். உதாரணமா: லைட் ப்ளூ தமிழன், டார்க் பிங்க் தமிழன், சிந்தாமணி கலர் தமிழன், ராமர் கலர் தமிழன்...

*  முஷ்டிய மடக்கி ‘ஏய்ய்ய்ய்ய்’னு கத்துற மாதிரி, கிங்காங் மாதிரி நெஞ்சுல அடிச்சுக்கிட்டு ‘ஊய்ய்ய்ய்ய்’னு கத்துற மாதிரி போட்டோக்கள சொந்த செலவுலயாவது ஃப்ளக்ஸ் பேனர்ல போடணும்.

*  ஏற்கனவே எந்தக் கட்சி அழியுற ரேஞ்சுல இருக்கோ... (மாங்குரஸ்னு வச்சுக்குங்களேன்!) அதை வேரோடு அழிப்பேன், கவரோடு கிழிப்பேன்னு சவால் விடணும்.

*  கொஞ்சம் ஃபேமஸ் ஆயிட்டா, ஏதாவது மார்க்கெட் போன நடிகையோட பிக்கப், டிராப், எஸ்கேப் பண்ண பழகிக்கணும்.
*  மிக மிக முக்கியமா... என்னதான் வறுமை ஒழிப்பு, அடிமை ஒழிப்புன்னு பேசினாலும், சுண்டு
விரல் மொத்தத்துல ஏழெட்டு பவுனுல தங்கச் செயின கழுத்துல போட்டிருக்கணும். கவர்ச்சி விளம்பரம்
முக்கியம் பாஸு!!!              

டாஸ்மாக்க பத்து மணிவரை தொறந்து வச்சி வருமானம் பார்த்துட்டு, கரெக்டா கதவ சாத்துன உடனே, குடிச்சுட்டு வாகனம் ஓட்டுறவங்க மேல கேஸ் போட்டு மேலும் வருமானம் பார்க்குது அரசாங்கம். ஓ, மை ஜீஷீஷீக்ஷீ நீறீணீss ஜீமீஷீஜீறீமீஸ்!   இந்தக் கொடுமையில இருந்து விடுபட சில குறுக்கு வழிகள்...

குடிச்சு பொழைச்சுக்கோங்க... சாரி, படிச்சு பொழைச்சுக்கோங்க!

*  வாரா வாரம் போலீசுல மாட்டி ஃபைன் கட்டுற காசுக்கு, குடிப்
பழக்கம் இல்லாத நல்ல ஆளா பார்த்து, நம்ம டூவீலருக்கு டிரைவரா போட்டுடலாம்.

*  இப்படி டூவீலருக்கு டிரைவர் போட வசதியில்லாதவங்க, நாம குடிக்கிறப்போ சைடு டிஷ்ஷை தின்னு தீர்த்தானே நண்பன் என்கிற போர்வையில் இருக்கும் ஒரு சமூக விரோதி, அவன கொண்டு போய் வீட்ல விடச் சொல்லலாம்.

*  வண்டில போறப்ப போலீஸ் புடிச்சுட்டா, நிறுத்தி இருக்கிற ஜீப் பேனட்டுலயோ, புல்லட் பெட்ரோல் டேங்க் மேலயோ படுத்துக்கிட்டு மவுத் ஆகி தூங்குற மாதிரி நடிங்க. ‘என்ன கொடுமைடா இது’ன்னு அவங்களே அட்ரஸ் விசாரிச்சு உங்கள வீட்டுல பத்திரமா விட்டுடுவாங்க.

*  போலீஸ்காரர் செக் பண்றப்ப ‘உவ்வ்வ்வ்வே’ன்னு வாந்தி எடுக்குற மாதிரி அவரு தோள் மேல சாஞ்சுக்கணும். ‘‘எந்திரிய்யா... எந்திரிய்யா...’’ன்னு அவர் சொல்றப்ப, இறுக்கமா அவர கட்டிப் பிடிச்சுக்கணும். நீங்க கொடுக்கற லந்துல அவுங்க கிர்ரடிச்சு போயிடுவாங்க. ஸ்டிராங்கா ஒரு டீ வாங்கிக்கொடுத்து வீட்டுக்கு அனுப்பிடுவாங்க.

 *  டாஸ்மாக் பக்கத்துலயே வீடு வாடகைக்குப் புடிச்சுக்கிட்டா, வண்டிய தள்ளிக்கிட்டே வீட்டுக்கு போயிடலாம்.

*  எப்பவுமே வண்டி கவர்ல பேஸ்ட், பிரஷ், வாட்டர் கேன் வச்சிருக்கணும். போலீஸ் வாய ஊத சொன்னாக்க, அங்கயே பல்லு விளக்கி ஃப்ரஷ்ஷா ஊதலாம்.

 *  இதெல்லாத்தையும் விட சிறந்தது, ஏதாவது நம்பருக்கு போன் போட்டு... ‘‘அண்ணாச்சி! நான் மாணிக்கம் மாப்ள பேசுறேன். கவுன்சிலர் இருக்காரா’’ன்னு சிக்னல் விடறது!
(பேசுவோம்)