கனவு கந்தசாமி





‘‘சார்! மெனு கார்டெல்லாம் பாக்கத் தேவையில்லை. டாஸ்மாக் ரேட்டுதான்! ஸ்டார் ஹோட்டல்னு பயப்படாம சாப்பிடுங்க...’’

‘‘படிச்சா த்ரில்லிங்கா இருக்குமேன்னு தேடினா... பேப்பர்ல ஒரு ஆக்சிடென்ட், ரேப், மர்டர், கொள்ளை நியூஸ்கூட காணோமே?’’

‘‘வீட்ல விருந்தாளிங்க இருக்காங்களேன்னுதான் தனியா கூப்பிட்டேன் சார்! பேங்க் கடன் பாக்கியை ஒரு வருஷமா நீங்க கட்டல... பார்த்து மனசு வச்சு கட்டுங்க!’’

‘‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... உங்க ஃபிரண்ட் கேசை அஞ்சு நிமிஷத்துல முடிச்சுட்டு போயிடலாம். எங்க சார்? இப்பல்லாம் எந்த வீட்லயும் சண்டை இல்லை. அதனால அதிகமா கேசுங்க வர்றதில்லை...’’

‘‘என்னடீ இது ஆச்சரியமா இருக்கு? ரெண்டு ரூம்லயும் ஏ.சி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின்னு போட்டு கொளுத்தறோம்... கரன்ட் பில் ஐநூறு ரூபாயைத் தாண்ட மாட்டேங்குது?’’

‘‘ஓ... சாரி... சாரி! இதாங்க எங்க நாட்டு சட்டசபை. ரொம்ப நாளா சத்தம், அமளி, வெளிநடப்புன்னு ஒண்ணுமில்லாம அமைதியா இருக்க றதால, டக்குன்னு ஞாபகத்துக்கு வரலை!’’