விஜய் ஜோடியாகும் அமலா பால்...





விஜய் நடிச்சு, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ட் பண்ணியிருக்க ‘துப்பாக்கி’ பட தெலுங்கு ரைட்ஸ் பத்து கோடிக்குப் போயிருக்காம். எல்லாம் ஓகே... டைட்டில் பிரச்னைக்கு என்னதான் முடிவு..?

விக்ரம் நடிச்சிருக்க ‘தாண்டவம்’ பட டப்பிங் வேலைகள் போய்க்கிட்டிருக்கு. இங்கே இல்ல, லண்டன்ல..! படத்துல நடிச்சிருக்க லண்டன்வாசிகளை அங்கேயே வச்சு டப் பண்ணிக்கிட்டிருக்கார் விஜய். ச்சீயான் பேசிட்டாரா..?

அடுத்து விஜய்யை வச்சு இதே விஜய் டைரக்ட் பண்ணவிருக்க படத்துல அவருக்கு ஜோடிகளா அமலா பாலையும், லக்ஷ்மி ராயையும் யோசிச்சு வச்சிருக்காராம். காஸிப்புகளும் ‘பால் மாறாம’ வந்துக்கிட்டிருக்கும்.

பாலாவோட ‘பரதேசி’யில தேயிலைத் தோட்டத் தொழிலாளியா நடிக்கிற தன்ஷிகா, இதுவரை பாலாகிட்ட ஒரு திட்டும் வாங்காம நடிச்சிருக்கிறதை யூனிட்டே ஆச்சரியத்தோட பேசுதாம். ‘அரவான்’ல கத்துக்கிட்ட பாடமோ..?

‘கும்கி’ படம் நல்லா வந்திருக்கிறதைக் கேள்விப்பட்ட டோலிவுட் ஹீரோ ராணா டகுபதி, படத்தைத் தெலுங்கில ‘டப்’ பண்ணிட வேண்டாம்னு பிரபுசாலமன்கிட்ட கேட்டிருக்காராம். அவரே டைரக்டா நடிக்கிற ஐடியா போல...

இசையமைப்பாளர் டி.இமானுக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கு. முதல் குழந்தை ஆணா இருக்க, இந்த இஷ்யூ பெண்ணாகியிருக்கிறதுல அவர் சந்தோஷத்தில் இருக்கார். இன்னும் ஒரு சுத்து ஏறிடாதீங்க பாஸ்..!

அக்ஷய் குமார் நடிக்கிற இந்திப் படத்தை ஜெயம் ராஜா டைரக்ட் பண்ணப் போறதா முன்னாலயே சொல்லியிருந்தோம். இப்ப கன்ஃபர்ம் ஆகியிருக்க படத்தைத் தயாரிக்கிறது பிரபல டைரக்டர் கம் புரட்யூசர் சஞ்சய்லீலா பன்சாலி.


தமிழ்நாட்டுல எண்பது தியேட்டர்கள்ல ரிலீசாகி ஐம்பது நாளைக் கடந்துட்ட ‘நான் ஈ’, இதுவரை இங்கே வசூலிச்ச தொகை மட்டும் ரூ.25 கோடியாம். இன்னும் தொடர்ந்து ‘ஈ’யை ஓட்டிக்கிட்டிருக்காங்க அந்த தியேட்டர்கள்ல! 

‘சௌந்தர்யா’ங்கிற பேர்ல இன்னொரு ஆவிக்கதை வருது தமிழ்ல. படத்துல வர்ற ‘கிட்ட வரவா...’ங்கிற பாடல் யு டியூப்ல சமீபமா ஹிட்டாகியிருக்கு. ஆவி கைவிட்டாலும் டெக்னாலஜி கை விடாது..!
- கோலிவுட் கோயிந்து

சைலன்ஸ்


போன வாரம் சென்னைல ஆறடி அக்கா படத்தை ஒரு மணி நேரம் நிறுத்திட்டாங்க யூனியன்காரங்க. விஷயம் இதுதான்... ‘அ..கா’வோட பர்சனல் மேக்கப் வுமன், யூனியன்ல உறுப்பினர் இல்லையாம். அதை சுட்டிக்காட்டியும் கண்டுக்காம விட்டுடவே இந்த நடவடிக்கையாம். முதல்ல ‘ஆ... ஊ...’ன்னு குதிச்ச ‘அ..கா’, பிறகு சூழ்நிலையோட விபரீதத்தை உணர்ந்து வழிக்கு வந்துடுச்சாம். ரூல்ஸ் எல்லோருக்கும் பொதுதானே மிஸ்..?

சண்டக்கோழி ஹீரோவோட அடுத்த படத்தை ஃபிளவர்பதி டைரக்ட் பண்ண நேர்ந்த கதை சீரியஸானது. உண்மையிலேயே ஹீரோ கம்பெனிலேர்ந்து ஒன்ஸ் அபான் எ டைம் டைரடக்கர் வாங்கிய அரைக்காலரைக்கா ‘கோ’ அட்வான்ஸைத் திரும்ப வசூலிக்கத்தான் ஆள் போச்சாம். ஆனா நேரே வந்த டைரடக்கர், ஹீரோகிட்ட தஞ்சமாகி தன் லேட்டஸ்ட் நிலைமையைச் சொல்லி, அதை நேர் செய்ய ஒரு கதை சொல்லியிருக்கார். ஹீரோவும் பெருந்தன்மையா அதைப் பண்ண ஒத்துக்கிட்டிருக்கார். செல்லமே..!