தத்துவம் மச்சி தத்துவம்1





‘‘தரகரே! பொண்ணு சினிமா ஹீரோயின் மாதிரி இருக்கும்னு சொன்னதை நம்பி வந்தோம்... இவ்ளோ கண்றாவியா இருக்கே?’’
‘‘ஹி... ஹி... இன்னைக்கு மேக்கப் இல்லாம இருக்கு..!’’
- தென்றல் நாசர், சங்ககிரி.

‘‘தலைவரை மறைமுகமா தாக்கறதுல நம்ம தொண்டர்கள் படு கில்லாடிங்க...’’
‘‘எப்படிச் சொல்றே..?’’
‘‘புறம்போக்கு நிலங்களின் பாதுகாவலனேன்னு போஸ்டர் அடிச்சிருக்காங்க..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

டெர்ரர் கடி
விக்கிபீடியா: எனக்கு
விக்கிபீடியா: எனக்கு
எல்லாமே தெரியும்!
கூகுள்: ஆனா என்கிட்டதான் எல்லாமே இருக்கு...
இன்டர்நெட்: நான்
இல்லாம நீங்களா..?
பவர்கட்:  அங்க என்னடா சத்தம்..?
மூவரும் (கோரஸாக): சும்மா பேசிக்கிட்டு இருக்கோம், மாமா!
- ஏ.ஸ்ரீதர்,
பொன்மேனிபுதூர்.

ஏராளமான முத்தக்காட்சிகளுடன் கமல் ஒரு படத்தை தயாரித்து நடித்தாலும், அந்தப் படத்துக்கு ‘கிஸ்’வரூபம் என்று பெயர் வைக்க முடியாது!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

சாதா ‘கன்’, ஏ.கே.47 ‘கன்’ல சுட முடியும்; ஆனால் மவுத் ஆர்‘கன்’ல சுட முடியாது..!
- தப்பைக் கண்டால் ஈவு இரக்கம் இல்லாமல் பாடியே கொல்லும் பாட‘கன்’ சங்கம்
- ஏ.எஸ். யோகானந்தம், ஔவையார்பாளையம்.

‘‘ஏட்டயா! கபாலி தினமும் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்துதானே போடறான்?’’
‘‘ஆமாம்... அதுக்கென்ன இப்போ?’’
‘‘அதுக்கென்னவா? போலீஸ்காரங்களுக்கு ஆட்டோகிராப் போடறதா, எல்லார்கிட்டேயும் அள்ளி விட்டிருக்கான்!’’
- ஆர்.தங்கராஜ், திருப்பூர்.

‘‘டாக்டர்... அந்த பேஷன்ட்
சரியான குடிகாரர் போலிருக்கு!’’
‘‘எப்படிச் சொல்றீங்க சிஸ்டர்?’’
‘‘மருந்தைக் கூட சோடா கலந்து கொடுக்கச் சொல்றாரு டாக்டர்...’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.