தத்துவம் மச்சி தத்துவம்





தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சா... ஏன்?’’
‘‘இப்பல்லாம் அவரைப் பார்க்க வர்றவங்களை டோக்கன் கொடுத்து உட்கார வைக்கறாரு...’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘மேடம்... நான் சேலத்திலிருந்து பேசறேன்!’’
‘‘உங்க டி.வி. வால்யூமைக் கொஞ்சம் குறைங்க...’’
‘‘எதுக்கு மேடம்..?’’
‘‘பின்னாடி உங்க அம்மாவும் மனைவியும் சண்டை போட்டுக்கிறது என் காதுல சரியா விழலை!’’
- சரவணன், கொளக்குடி.

என்ன கபாலி... இப்பல்லாம் வெளியூர் போய்க்கூட திருட ஆரம்பிச்சிட்டியாமே..?’’
‘‘நம்பாதீங்க ஏட்டய்யா... எமக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது!’’
- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.


கட்சி ஆபீஸ்ல முன்னால எல்லாரும் தலைவர் முன்னால விரல் நீட்டி நிக்கறாங்களே... ஏன்?’’
‘‘தலைவர் கை நாட்டுப் போராட்டம் ஆரம்பிக்கறார்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

என்னதான் மணிபர்ஸ்னாலும் அதுல கோயில் மணியை வச்சிட முடியாது!
- மணியை வைத்து தத்துவ ஹனியைப் பிழிந்து தருவோர் சங்கம்
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

ஸ்பீக்கரு...

தலைவருடைய பேச்சைக் கேட்கத்தான் உங்களுக்கு மனசில்லை! வீட்டில் புழுக்கமாக இருக்குமே... காற்று வாங்கவாவது பீச்சுக்கு வந்திருக்க வேண்டாமா?’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.