சிரிப்பு போலீஸ் அனுஷ்கா!
‘உலகநாயகன்’ பட்டத்துக்குப் பொருத்தமா கமலோட அடுத்த படத்தை ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்ன் தயாரிக்க, கமலே டைரக்ட் செய்து நடிக்கப் போறது நல்ல விஷயம். அதுல ‘ஆஸ்கர் நாயகன்’ங்கிற இன்னொரு பட்டத்தையும் தக்க வச்சுக்குவாரா..?

அஜித்தோட ‘பில்லா 2’ இந்த 22ம் தேதி வெளியாகப் போறதா நியூஸ். அன்னைக்கு என்ன விசேஷம்னு ஞாபகம் இருக்கா..? விஜய்யோட பர்த்டே அன்னைக்குத்தான்! ஆக ‘தல’ பட ரிலீசுக்கு ‘தளபதி’ ரசிகர்கள் ஸ்வீட் கொடுக்கப் போறாங்க..!
‘தென்மேற்குப் பருவக்காற்று’ல தன் ஆறாவது தேசிய விருதை வாங்கிய வைரமுத்து, அதே பட டைரக்டர் சீனுராமசாமியோட ‘நீர்ப்பறவை’யில விவிலிய வார்த்தைகளைப் பெரும்பாலும் பயன்படுத்தியே பாடல்களை
எழுதியிருக்காராம். ‘புதிய ஏற்பாடா’ இருக்கே..?

இந்த வாரம் வெளியாகிற கார்த்தியோட ‘சகுனி’யில அனுஷ்கா ஒரு கெஸ்ட் ரோல்ல நடிச்சிருக்கிறது தெரிஞ்ச விஷயம். அது ஒரு சிரிப்புப் போலீஸோட ரோலாம்.
 
அதே கார்த்தியோட அதே அனுஷ்கா அடுத்து நடிக்கிற ‘அலெக்ஸ் பாண்டியனு’க்காக
சமீபத்துல எடுத்த ஒரு ரயில் சண்டைக் காட்சியில, பாலத்துல ஓடற ரயில்ல இருந்து கீழே ஓடற ஆத்துக்குள்ள டூப் போடாம குதிச்சு சீரியஸாவும் நடிச்சிருக்கு. அடடே அனுஷ்க்..!


ராம்சரண் தெலுங்குல நடிச்ச ‘சிறுத்தா’ தமிழ்ல வெளியாகுது. ஆனா இங்கே ‘சிறுத்தை’ன்னு ஏற்கனவே படம் வெளியாகிட, கூட ‘புலி’யையும் சேர்த்து ‘சிறுத்தை புலி’ன்னு வச்சுட்டாங்க. ஃபாரஸ்ட்ல வேற ஏதாவது அனிமல்ஸ் மிச்ச
மிருக்கா..?

கொஞ்ச நாளா தமிழ்ல காணாமப் போயிருந்த மோனிகாவை ‘குறும்புக்காரப் பசங்க’ மூலமா டைரக்டர்
டி.சாமிதுரை கொண்டு வர்றார். அதுவும் ஹீரோக்களுக்குப் போட்டியா படத்துல அஜித்தோட பரம ரசிகையா வருதாம் மோனிக்ஸ். வாங்க மங்காத்தா..!

பெரிய டைரக்டர்கள் நடிக்கக் கேட்டும் மறுத்துவந்த பாடகி ஸ்ரேயா கோஷலை நடிக்க சம்மதிக்க வச்சிருக்கார் பிரபு சாலமன். அவர் தயாரிக்கிற ‘சாட்டை’யோட வீடியோ ஆல்பத்துல குரலோட, முகம் காட்டியும் நடிச்சிருக்கு ஸ்ரேயாஸ்.

‘சோக்காலி’ படத்துல வழக்கமான கிளாமரோட சீரியஸ் ரோல்லயும் நடிச்சிருக்க சோனா, போன வாரம் தன் பிறந்த நாளை கைவிடப்பட்ட சிறுமிகளுக்கான ‘ஜீவாதனம்’ங்கிற சேவை இல்லத்துல கொண்டாடியிருக்கு. பிறந்த நாளே சிறந்த நாள்..!
- கோலிவுட் கோயிந்து

சைலன்ஸ்

ஞானியோட இசைஞானத்தை மூலதனமா வச்சு மேனன் பண்ற படத்தோட ஆடியோவை ரெண்டெழுத்து ‘சோ’ நிறுவனம் பெரிய ரேட் கொடுத்து வாங்கியிருக்கு. அதுல பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனா அந்த ரேட், ‘விண்ணைத் தாண்டிய’ ரேட்டுன்னு விவகாரமாவே விளம்பரப்படுத்திக்கிட்டு இருக்காங்க வெளியில. ‘புயல்’ மேல ஏன் இந்த பொல்லாப்பு..?

சமீபத்துல ஆப்ரிக்கா போய் நடிச்சுட்டு வந்த தேசிய நடிகர் மேல கடுப்புல இருக்காராம் அந்தப்பட டைரக்டர். விஷயம் என்னன்னா, வெளிநாட்டுல எடுத்த அத்தனை காட்சிகளையும் நடிகரே டைரக்ட் பண்ணியதுதான். ஏற்கனவே அவர் ‘வெள்ளோட்டம்’ பார்த்த படம் கொடுமையான ரிசல்ட் தந்தும், ‘அவருக்கு ஏன் இந்தக் கொலவெறி..’ன்னு தன் சர்க்கிள்ல கேட்டுக்கிட்டிருக்காராம் டைரடக்கர். அத டைரக்டா அவர்கிட்டயே கேட்டிருக்கலாமே..?