தத்துவம் மச்சி தத்துவம் 1

‘‘அரெஸ்ட் வாரன்ட்டுக்கு நம்ம தலைவர் மஞ்சள், குங்குமம் எல்லாம் வைக்கிறாரே... ஏன்?’’
‘‘எல்லா சமயத்திலும் நீதிமன்றத் தீர்ப்பை நாம ‘கௌரவிக்கணும்’னு அவர்கிட்ட யாரோ சொன்னாங்களாம்...’’
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.

‘‘தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சா... ஏன்?’’
‘‘இலவச மருத்துவ முகாம் நடத்தி கட்சிக்கு தொண்டர்களை சேர்க்கப் போறேன்னு சொல்லிக்கிட்டுத் திரியறாரே..!’’
- தி.ஆ.டேவிட், தென்காசி.

அம்மாவின் கை அன்பைக் காட்டும்; அப்பாவின் கை அறிவைக் காட்டும்; நண்பனின் கை ஃபிகரைக் காட்டும்... ஆனால், ஃபிகரின் கை டாட்டா காட்டும்!
- சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவோர் சங்கம்
- கே.கே.ரமேஷ், திருச்சி.

‘‘சுற்றுப்பயணம் போனப்ப தலைவர் லாட்ஜ்ல ரூம் போட்ட செலவா இவ்வளவும்..?’’
‘‘கூடவே அவர் லார்ஜ் போட்ட செலவும் இல்லே சேர்ந்திருக்கு..!’’
- பிரியதர்ஷன், சேலம்.

‘‘கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷ மாகுது... இன்னும் பணத்தைத் தராம இழுத்தடிக்கிறான்...’’
‘‘வரதட்சணை பணமா..?’’
‘‘இல்லைங்க... மொய்ப் பணம்!’’
- க.கலைவாணன், நகரி.

என்னதான் சோகமான மூட்ல தண்ணி அடிச்சாலும் ‘சியர்ஸ்’னுதான் சொல்வாங்க; ‘டியர்ஸ்’னு சொல்லி அழ மாட்டாங்க!
- சரக்கு அடிக்க காசில்லாமல், பாட்டில் வாசனையை முகர்ந்து போதை ஏற்றிக் கொள்வோர் சங்கம்
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘மகளிரணித் தலைவி ஏன் கோபமா இருக்காங்க..?’’
‘‘கறுப்பா இருக்கிற அவங்களை ‘எங்கள் கட்சியின் மின்வெட்டே’ன்னு யாரோ வர்ணிச்சுட்டாங்களாம்...’’
- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.