கரன்ட் கபாலி





‘‘என்ன சார் நீங்க? நியூமராலஜிபடி கே.பாலின்னு கையெழுத்து போட்டா, பழையபடி கபாலின்னே போடச் சொல்றீங்க?’’

‘‘பொண்ணுங்களை மயக்கற சென்ட் எதுவும் வேணாம்! பாடி ஸ்பிரே அடிச்சா, போலீஸ் நாய்கூட மோப்பம் பிடிச்சு வரக்கூடாது... அது மாதிரி இருந்தா குடுங்க!’’

‘‘கபாலி
சேட்டையை பாருங்க சார்! எப்பவுமே நம்பளால அவனைப் பிடிக்க முடியாதுன்னு காட்டறதுக்காக, இப்படி கார்ட்டூன் எலியும் பூனையுமா பேனர்
வச்சிருக்கான்...’’

‘‘தப்பா எடுத்துக்காதீங்க இன்ஸ்பெக்டர் சார்! டெங்கு காய்ச்சல்ல படுத்திருக்கீங்க... ஆனா பொறந்த நாளும்
கிராஸ் ஆகுது!
என்ன பண்ணச் சொல்றீங்க?’’

‘‘குழம்பாதீங்க ஏட்டய்யா! 403, 236, 128லிருந்து நீங்க
தப்பிக்கவே முடியாதுன்னு சொன்னது இ.பி.கோ.
சட்டத்தை இல்லை...
புழல்ல இருக்கற கைதிங்க நம்பரை! உங்க மேல
செம காண்டா இருக்காங்க...’’

‘‘டெய்லியும் கால் டாக்ஸியில வர்றது கட்டுப்படியாகுதாவா? கண்ணு வைக்காதீங்க
ஏட்டய்யா! சிட்டியில ஓடற எனக்கு சொந்தமான பத்து கால் டாக்ஸியில இதுவும் ஒண்ணு...’’