தத்துவம் மச்சி தத்துவம்





‘‘என்ன கொடுமைய்யா இது..? இந்தப் பத்திரிகையில என்னைப் பத்தி தாறுமாறா போட்டிருக்கு! ஒரு கோடி ரூபாய் கேட்டு பத்திரிகை மேல மானநஷ்ட வழக்கு போடப் போறேன்...’’
‘‘ஆவேசப்படாதீங்க தலைவரே! அது சி.பி.ஐ. உங்களுக்கு அனுப்பின குற்றப்பத்திரிகை..!’’
- ம.விருதுராஜா,
திருக்கோவிலூர்.


என்னதான் முன்னெச்சரிக்கையான ஆளுன் னாலும், மேல்லோகத்துக்கு டிக்கெட¢ வாங்கிட்டா, ரிட்டன் டிக்கெட் எல்லாம் வாங்கி திரும்பிவர முடியாது.
- ரிட்டன் டிக்கெட் இல்லாமல், வித¢அவுட்டில் பயணிப்போர் சங்கம்
- பெ.பாண்டியன்,
காரைக்குடி.

‘‘என் திறமைக்கு ஏற்ற தீனி இந்தப் படத்தில் கிடைக்கலைன்னு ஹீரோ புலம்பிக்கிட்டே இருக்காரே...’’
‘‘தினம் ஷூட்டிங் லஞ்ச் டைம்ல, சிக்கன், மட்டன், இல்லாம வெறும் சைவ சாப்பாடு போடறாங்களாம்..!’’
- க.கலைவாணன், நகரி.

‘‘என்னது... நான் சுற்றுப்பயணம் போற வழியில அங்கங்கே கிழவிங்களை நிக்க வச்சிருக்காங்களா? யாருய்யா இப்படிச் செய்யறது...’’
‘‘தீவிரவாதிங்கதான் தலைவரே... கண்ணிவெடி ஸ்டாக் இல்லாததால இப்படி கிழவிகளை வச்சிருக்காங்களாம்!’’
- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.

இடம் விட்டு இடம் போவதை இடப்பெயர்ச்சின்னு சொல்லலாம்; அதுக்காக, ஒரு வாத்தியார்கிட்ட படிச்சிட்டு இன்னொருத்தர் கிட்ட போய் படிச்சா, அதை ‘குருப் பெயர்ச்சி’ன்னு சொல்ல முடியுமா?
- மூளையை முட்டிக்காலுக்கு இடப்பெயர்ச்சி செய்வோர் சங்கம்
- ஜி.தாரணி, அரசரடி.

‘‘உன்னை பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை பயங்கர ஜொள்ளு பார்ட்டியா... எப்படிச் சொல்றே?’’
‘‘உங்க பொண்ணுகூட ஒரு வாரம் தனியா பேசணும்னு எங்கப்பாகிட்ட
கேட்டாராம்..!’’
- ஏ.ஸ்ரீதர், பொன்மேனிபுதூர்.

‘‘வாஸ்து நிபுணர் என்ன சொல்லிட்டாருன்னு தலைவர் இவ்வளவு குழப்பமா இருக்காரு..?’’
‘‘தலைவரோட பெரிய வீட்டை சின்ன வீட்டுக்கும், சின்ன வீட்டை பெரிய வீட்டுக்கும் இடம் மாத்தினாத்தான் நல்லது நடக்கும்னு சொல்லிட்டாராம்...’’
- பிரியதர்ஷன், சேலம்.