வலைப்பேச்சு





எம்பி ஆக பொறுப்பேற்றார் சச்சின். நூறு நூறா அடிக்கிறவர் கோடி கோடியா அடிக்கும் கூட்டத்தில்!
- சதீஷ் பழமலை

ராணுவ அதிகாரி ஆவதற்கும் மந்திரி ஆவதற்கும் கிரிக்கெட் விளையாடத் தெரிந்தால் போதும் என்பது இந்தியருக்கு மட்டுமே புரியும்!
- முகமூடி


நீ எடுத்த மதிப்பெண்ணுக்கு இதுதான் கிடைக்கும் என்று தள்ளப்படும்போது காயப்படுவது மாணவரல்ல
- கல்வி.
- சிந்தன் ரா

பள்ளி, கல்லூரிகளில் வில்லனாகத் தெரிந்த சில ஆசிரியர்கள், தற்பொழுது மெல்ல மெல்ல நாயகன் ஆகிறார்கள்
# வாழ்க்கை பாடம்
- தம்பியிந்தம்பி பாபு

நித்யானந்தாவை கைது செய்வதை வீடியோவில் படம் பிடிப்போம்: பெங்களூர் கூடுதல் துணை கமிஷனர்
# எவ்வளவோ வீடியோங்களப் பாத்துட்டோம்...
இதப் பாக்க மாட்டோமா!
- ஜெயராஜ் பாண்டியன்

குழந்தைகள் வருமானம்
வீட்டுக்கு அவமானம்
- முதல்வர்
டாஸ்மாக் வருமானம் நாட்டுக்கு அவமானம்
- இனியவன்
- இனியவன் தமிழன்


குருமால விரல் படாம பரோட்டா சாப்பிட்டா, அவன் நகரவாசி; பிச்சி பிச்சிப் போட்டு பிசஞ்சி சாப்பிட்டா, அவன் கிராம வாசி.
டேய் பட்டணத்து பயலுவளா... ஏன்டா இப்படி மேலயும் கீழயும் பாக்குறீங்க??
- அப்துல் வஹாப்

ஆயில் குறைத்தால்
ஆயுள் கூடும்.
# தொடர் சீக்குகளின்
விளைவாக எழுந்த தத்துவம்
- ரமேஷ் ரக்சன்

ஆண்டவன் கெட்டவங்களுக்கு நிறைய குடுப்பான். ஆனா, கை விட்ருவான்...
உதாரணம்: நித்தி
நல்லவங்கள சோதிப்பான். ஆனா, கை விடமாட்டான்.
உதாரணம்: பவர் ஸ்டார்.
- தீசன் ராமநாதன்



@vedhalam
  கறுப்பு கலர்ல பழைய பத்து ரூவா நோட்டு ஒண்ணு இருக்குமே, அதைத்தான் கறுப்புப் பணம்னு பல நாள் நினைச்சிட்டிருந்தேன்.
 
@erode_kathir    
வெளிநாட்டில் இருப்பதெல்லாம் கறுப்புப் பணம் கிடையாது - பிரணாப்
# அய்யோ... இவரை சீக்கிரம் குடியரசுத் தலைவராக்கி ஃப்யூசை புடுங்குங்களேன்!

@CarbonKaradi 
நம் மூதாதையர் ‘எதிர்காலம்’ என்று நினைத்த காலம் ஒன்றில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

@rghavan66   
ஜூலை 19ல் ஜனாதிபதி தேர்தல்
# ஈர்ப்பே இல்லாத ஒரு தேர்தல் உலகத்தில் உண்டென்றால் அது இதுதான்!!!

@naanraman   
100 கிராம் பொருள் நிறுக்கையில் மிஞ்சிய கொசுறையும் சேர்த்து கட்டித்தரும் கடைக்காரரின் தாராளம் இருக்கிறதா சூப்பர் மார்க்கெட்களிடம்?!

@RealBeenu   
குப்பைத்தொட்டியில் போடப்படாத ஒரே காகிதம் ‘பணம்’!

@gpradeesh
கை நிறைய கடலை வைத்துக் கொண்டு தின்ற போதும், மனம், சிதறி விழுந்த அந்த ஒற்றைக்கடலையின் மீதே நிற்கிறது
# ஜென்

@sivagnanamtvl
  செய்தி: டாஸ்மாக் விலையேற்றம் காணலாம் சில நாட்களில்!
# இதுல இருந்தே தெரியலையா இது குடிமகன்களுக்கு எதிரான ஆட்சின்னு!

@kalasal 
  உலகம் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருப்பதற்குக் காரணம் ‘மூளை’ அல்ல... ‘வயிறு’தான்..!

 @iParisal
  வழி விடச் சொல்லி அல்ல, பின்னால் அமர்ந்து செல்லும் பெண் முகம் காணவே பெரும்பாலான ஹார்ன்கள் ஒலிக்கப்படுகின்றன...

@thoatta
எப்போது ஏதோவொரு அரசாங்க அலுவலகம் போனாலும், ஏதோ கேட்டு பியூனிடம் திட்டு வாங்கும் வயோதிகர்களைப் பார்க்கிறேன்.

@sweetsudha1
  2 ஆண்டுகளில் 2வது முறையாக சிறைக்குச் செல்லும் நித்யானந்தா
# விட்டா விழா எடுப்பாங்க போல இருக்கு!

@ros_vic
  தனக்கு இருக்கிற நம்பிக்கை தன்னம்பிக்கைன்னா, அவளுக்கு இருக்கிற நம்பிக்கையை அவநம்பிக்கைன்னுதானே சொல்லணும்?

@ChPaiyan
  எனக்கு மட்டும் மேஜிக் தெரிந்தால், காலையில் ஸ்கூல் வேன் வரும் வேளையில் போர்க்களமாய் மாறும் வீட்டினை அமைதிப்பூங்காவாய் மாற்றுவேன்.


@jill_online
  கொமாரு ஞானம் வந்து ஒரு நாள் கடவுளாவலாம்; கடவுள் தலைகீழா நின்னாலும் கொமாராவ
முடியாது.

@senthilcp
  மனைவி கணவனுக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே தருகிறார் 1. என் கிட்டே உண்மையை மட்டும் சொல் 2. பொய்யே சொல்லாதே!

@Butter_cutter
  ஆத்தா அடுத்த முறை கெரசின் கேட்டு கடிதம் எழுதினா எங்களுக்கும் 2 லிட்டர் சேத்துக்குங்க. 12 மணி நேரம் கரன்டு போக ஆரம்பிச்சாச்சு