வலைப்பேச்சு



arulezhilan

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள்.
இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது.
குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா?

‘அவன் இவன்’ படத்தில் பெண் வேடமிட்டு விஷால் நடனமாடும் பாடலுக்கு ஒரு சிறுமி நடனமாடுவது இந்த வாரம் செம வைரலானது. உண்மையில் அது சிறுமி அல்ல சிறுவன். பார்ப்பதற்கு அச்சு அசல் பெண் போலவே இருக்கும் க்யூட் பையனின் கெட்ட ஆட்டம் வேற லெவல்.

@iVenpu
சாப்பிடுறது கூட ஓகே... தள்ளிப் போட்டுக்கலாம். இந்த ரெஸ்ட் ரூம் போற ஒண்ணு, ரெண்டு வேலை எல்லாம் ரோடுல இறங்கும் முன்னயே செஞ்சுக்கணும். அரை
மணிநேரம் தானே, வீட்டுக்கு போயி போயிக்கலாம்னு மட்டும் கிளம்பிடக்கூடாது. #பெங்களூரு பரிதாபங்கள்...

ramanujam.govindan
ஜோசியரே! பொண்ணு கல்யாணத்துக்குக் குறிச்ச நாள், நல்ல நாள்தானே!!
என்ன அப்படிக் கேட்டுட்டேள்! சந்திரன் உச்சத்தில் இருக்காக்கும். காலை 6 - 8 முகூர்த்தம். எட்டு மணிக்கு மேல IIT JEE, NEET தொடங்கி UPSC, TNPSC வரை எந்த எக்ஸாமும் எழுதலாம்.

saranya121289
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கிரகப் பிரவேசத்தில் கலந்து கொள்ளும்போது‘பெருமூச்சு’ விடுவதை தவிர்க்க முடியாது.....

 Pa Raghavan
கணவனால் அடிக்கடி பிரச்னை வந்தால் வீட்டை விட்டு வெளியேற்றலாம் என்று எந்த நீதிமன்றத்திலோ நேற்று சொல்லியிருக்கிறார்கள். இன்றைக்கு என்னடாவென்றால் தம்பதியர் தினம். இந்த உலகம் ஒரு மார்க்கமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.anyway, என் சுமார் பாதியை வாழ்த்தி - இல்லை, வணங்கிவிடுகிறேன்.

https://www.facebook.com/erodekathir
சொற்கள் தீர்ந்து போவதால் மட்டுமே ஒருவர் மௌனம் கடைப்பிடிப்பதில்லை!

https://www.facebook.com/ayyanarv
பாராளுமன்ற புதுக் கட்டடத் துவக்க விழாவை சில நிமிடங்கள் பார்த்தேன். டெல்லியில் தமிழ் கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால், சூழ்ந்திருந்த சாமியார்களைப் பார்க்கத்தான் கெதக் என்றிருந்தது. இவருக்கு உண்மையிலேயே இந்திய இறையாண்மை குறித்து ஒன்றும் தெரியாதா அல்லது தெரிந்தும் அதிகாரச் செருக்கால், மதம் மீதிருக்கும் பற்றால் இப்படிச் செய்கிறாரா என்பதும் தெரியவில்லை.  

இந்துவாக, தமிழராக இதைக் கொண்டாடும் பலருக்கும் இந்தியா இந்துக்களின் நாடு மட்டுமே  கிடையாது என்பதை யாராவது சொல்லிப் புரிய வைக்க வேண்டும். மோடிக்குப் புரியாது.
போலவே இந்தச் சடங்குகள் யாவும் இந்தியாவை தாய்நாடாகக் கொண்ட பிற மொழி, மத, இன மக்களுக்கு அந்நியமாகவும், ஏன் அசூசையாகவும் தெரிய வரலாம். அம்பேத்கர் இயற்றிய இந்தியச் சட்டத்தின்படி, தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் இந்தக் கும்பலை உள்ளேயே தள்ளலாம்.இந்தப் பைத்திக்காரங்க கிட்ட மாட்டிட்டு நாமும் நம்ம ஒருமைப்பாடும் படுறோம் பாருங்க. முடியல!

https://twitter.com/keethiguna
தன்னை பற்றிய ரகசியங்களை பிறரிடம் கூறும்பொழுது அது என்றாவது ஒருநாள் தன்னையே தாக்கும் பழிவாங்கும் ஆயுதமாக மாறுகிறது.

#ரகசியம் ரகசியமாய் இருப்பதே நல்லது

https://twitter.com/asdbharathi
வெகு நேரம் சுமந்து கொண்டு இருந்தால் சிறிய சுமை கூடப் பெரும் சுமையாகத் தெரியும்.

https://twitter.com/revathy3393
சொந்தக்காரங்க வீட்டுக்கு விருந்தாளியா  நாம போனாலும், நம்ம வீட்டுக்கு விருந்தாளியா சொந்தக்காரங்க வந்தாலும் சமைக்கற வேலைய நமக்குதான் லீஸுக்கு விடுறாங்க!

https://www.facebook.com/primyarayee
இருபத்து ஒன்றிலேயே இறந்து போன அண்ணன் ஒருவன் நட்டு வைத்த மாமரங்களில் ஒன்று அகஸ்மாத்தாய் அவர்கள் வீட்டில் வளர்ந்தது. ஒவ்வொரு கோடையிலும் அண்ணன்  பூத்துக் காய்த்து தங்க நிற பழங்களாய் மினுக்கல் காட்டுகிறான். கைகொள்ளாத அந்த பழங்களைப் பறித்து பை நிறைய அனைவருக்கும் நிறைத்து தருவதில் என் பெரியன்னைக்கு அவ்வளவு சந்தோஷம்.

அவர்கள் வீட்டிற்கு சென்றால் உள்ளிலிருந்து பேரக்குழந்தைகளை தூக்கி வருவது போல, முகம் மின்ன பழங்களை இடுப்பில் சுமந்து கொண்டு வருவாள். இறந்த பின் நட்சத்திரங்கள் ஆவதாய் சொல்லப்படுகிறது எல்லாம் உண்மையா இல்லையா என்று அறிகிலேன். நிழலாகவும், காற்றாகவும், பழமாகவும் ஆவது என்பது சாத்தியம்தான்...