மல்லுவுட்டை மிரட்டும் 2018
கேரளாவில் 2018ல் வந்த வெள்ளம் அம்மாநிலத்தின் பல பகுதிகளை அப்படியே புரட்டிப்போட்டது. அந்த வெள்ளத்தில் சிக்கியவர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு மீண்டார்கள், மக்கள் என்னென்ன தியாகங்களை செய்தார்கள் என்பதை பரபரப்பான திரைக்கதையில் சொல்லும் மலையாளப் படம்தான் ‘2018’.டோவினோ தாமஸ், குஞ்சாகோ போபன், ஆசிஃப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், லால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜூன் ஆந்தனி ஜோசப் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.
வெளியான 11வது நாளிலேயே 100 கோடிகளை ‘2018’ வசூலித்துள்ளது. மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’, வெளியாகி 12வது நாளில் 100 கோடி வசூலித்ததே இதுவரை சாதனையாக
இருந்தது. மோகன்லாலின் ‘புலிமுருகன்’ 137.75 கோடி வசூல் செய்திருந்தது.
‘லூசிஃபர்’ 125.10 கோடி வசூலைப் பெற்றது. மம்மூட்டி நடித்த ‘பீஷ்ம பர்வம்’ ரூ.87.65 கோடியும், அவரது மகன் துல்கர் சல்மான் நடித்த ‘குரூப்’ ரூ.83 கோடியும் வசூல் செய்திருந்தன. இப்போது இந்த இரண்டு படங்களையும் பின்னுக்குத் தள்ளி போட்டியை சூடுபிடிக்க வைத்திருக்கிறது ‘2018’.
காம்ஸ் பாப்பா
|