சேலையில் ஸ்கீயிங்!



அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்தியரான திவ்யா மைய்யாவைப் பற்றித்தான் அங்கே ஹாட் டாக். விளையாட்டு வீராங்கனை, தலைமைச் செயல் அதிகாரி, நடன மங்கை என பன்முகங்களைக் கொண்டவர் இவர். திவ்யாவுக்கு ஸ்கீயிங் என்கிற பனிச்சறுக்கு விளையாட்டின் மீது பெருங்காதல். இதில் ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் விருப்பம்.

பொதுவாக பனிச்சறுக்கு விளையாடும்போது உடையில் கவனம் செலுத்து வேண்டும். கொஞ்சம் தடுமாறினாலும், உடைகள் பொருந்தவில்லை என்றாலும் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த ஆபத்தை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டார் திவ்யா. ஆம்; சேலை அணிந்து பனிச்சறுக்கு விளையாடியிருக்கிறார். இப்படி சேலை அணிந்து பனிச்சறுக்கு விளையாடிய முதல் பெண் திவ்யாவாகத்தான் இருக்க வேண்டும்.

திவ்யா சேலை அணிந்து பனிச்சறுக்கு விளையாடுவதோடு மட்டுமல்லாமல், நவீன தொழில்நுட்ப உதவியுடன் தனது சாகசத்தை அவரே வீடியோவாக்கி இன்ஸ்டா
கிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ 20 லட்சம் பார்வைகளைத் தாண்டி வைரலாகிவிட்டது.

த.சக்திவேல்