எச்சரிக்கை மணி!ரீடர்ஸ் வாய்ஸ்

ஆண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் பற்றிய மருத்துவ ஆலோசனை விவரங்கள் மெய்சிலிர்க்க வைத்தன. எச்சரிக்கை மணி அடித்த கட்டுரை.
- மீ.அழகுமங்கை, அடையாறு; க.நஞ்சையன், பொள்ளாச்சி; கீதா, கோவில்பட்டி, கருணாகரன், போரூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; சிவக்குமார், திருச்சி; எஸ்.சுந்தர், திருநெல்வேலி.

ஆஹா! 600 ஆண்டுகளாக இருக்கும் புல் பாலம் பற்றிய தகவல்களும் படமும் அற்புதம். சாலைப் போக்குவரத்துத் துறையின் முக்கிய அம்சம் இந்தப் பாலம் என்பது இன்னும் வியப்பு.
- கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு; எஸ்.சுந்தர், திருநெல்வேலி; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; இலக்சித், மடிப்பாக்கம்; சரண், வேளச்சேரி.

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களால் படகா... சீன் ரெட்டி மாதிரி நம் நாட்டிலும் ஒருவர் புரட்சி செய்தால் நன்றாக இருக்கும்.
- ஆசிகா, வியாசர்பாடி; கவுரிநாத், பரங்கிமலை; முகம்மது உஸ்மான், மூலக்கடை; ஜெர்லின், ஆலந்தூர்; பிரேமா குரு, சென்னை.

‘நிறைகுடம் தளும்பாது’ என்ற பழமொழிக்கு நல்ல உதாரணம் பி.சி.ராம். ‘புரிதல்’ என்ற சொல்லுக்கு அவர் கூறிய விளக்கமும், ‘ஒலி பிறக்க ஒளி, ஒளி பிறக்க ஒலி’ என்ற தத்துவ வார்த்தைகளும் சிந்திக்க வைப்பவை.
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; கோ.குப்பு
சாமி, சங்கராபுரம்; பிரேமா குரு, சென்னை; ரா.புனிதவதி, பொள்ளாச்சி; மனோகர், கோவை; எஸ்.சண்முகம், திருவண்ணாமலை.

தியேட்டருக்கு சென்று டிக்கெட் புக் பண்ணினால் 120 ரூபாய் என்றால் ஆன்லைனில் 150 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் இந்த முயற்சி மறைமுகமான பிளாக் டிக்கெட் விற்பனை போலத்தான்.
- த. சத்தியநாராயணன், அயன்புரம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; கதிரவன், மதுரை; அமிர்பத்ரா, சென்னை; ஆர்.ஜெ.சி, சென்னை.

பிடித்த பேச்சாளர் என்று கூறி நரேந்திர மோடியை நாசூக்காக கலாய்த்திருக்கிறார். சபாஷ் குஷ்பூ.
- கலிவரதன், கீழ்க்கட்டளை; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; செம்மொழி, சேலையூர்; மியாவ்சின், கே.கே.நகர்.

உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் ஆர்கானிக் காரை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். நமது இந்தியாவிலும் ஆர்கானிக் காரை வடிவமைக்க வேண்டும்.
- ரா.ராஜதுரை, சீர்காழி; நிலவழகு, நீலாங்கரை; மகேஸ்வரி, பொள்ளாச்சி; ரவிக்குமார், கோவை; சந்திரசேகர், திருப்பூர்.

தீவிரவாதத்தை விட மோசமாக வரி பயங்கரவாதம் நம் தேசத்தை அரித்துக்கொண்டு வருவதை கட்டுரை அதிர்ச்சிகரமாக உணர்த்தியது.
- பிரபாகர், தேவகோட்டை; கதிர், மதுரை; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.