அப்படி இப்படி சமந்தா!
டாப் ஹீரோயின்ஸ் என்றாலே சர்ச்சைகளுக்கு தீனி போடுவதுதானே?!
அந்த வகையில் நயன்தாராவைப் போலவே சமந்தாவும் இப்பொழுது சர்ச்சைகளின் நாயகியாகி இருக்கிறார். நோ... நோ... நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவுடன் காதல், அடுத்து அவருடன் திருமணம், பின்னர் விவாகரத்து என்பதைக் குறிப்பிடவில்லை.
 அது சமந்தாவின் பர்சனல் மேட்டர்.இது வேறு வகையான சர்ச்சை. ‘ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸில் நெருக்கமான காட்சியில் சமந்தா நடித்து ஒரு அதிர்வை உண்டாக்கியது நினைவிருக்கலாம்.இதன் வேகம் தணிவதற்குள் ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றீயா... மாமா...’ பாடலில் உடல்மொழியில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கினார்.  பின்னர் மையோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் பிரச்னையினால் அவதிப்பட்டவர் படப்பிடிப்பில் பங்கேற்பதை சில மாதங்கள் தவிர்த்துவிட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். உடல் நலம் தேறி வந்தவர், விட்ட இடத்தில் இருந்து மீண்டும் சர்ச்சையைத் தொடர ஆரம்பித்துள்ளார். யெஸ். இந்திப் படங்களில் நடிக்க விரும்பும் சமந்தா, வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அப்படித்தான் ‘சிட்டாடல்’ வெப் சீரிஸில் நடித்து வருகிறார். பாலிவுட்டின் பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் நடித்த ‘சிட்டாடல்’ வெப் சீரிஸ், பல நாடுகளில் அந்தந்த மொழிகளில் அந்தந்த நாட்டு நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி இந்திய பதிப்பில் சமந்தா நடித்திருக்கிறார். அதாவது அமெரிக்காவில் பிரியங்கா சோப்ரா நடித்த ரோலில். விஷயம் இதுவல்ல.
‘சிட்டாடல்’ சீரிஸில் அரை நிர்வாண மற்றும் ஹீரோவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில், தான் நடித்திருப்பதாக ஊடக சந்திப்பில் பிரியங்கா சோப்ரா தெரிவித்திருந்தார்.எனில், இந்திய பதிப்பில் சமந்தாவும் அப்படி நடித்திருப்பாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாகச் சுற்றி வருகிறது. சீரிஸ் வெளிவந்த பிறகே இதற்கான விடை கிடைக்கும்!
ஜான்சி
|