டாப்ஸி டயட்டீஷியனுக்கு எவ்வளவு சம்பளம்?



வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போல் ஜொலிக்கும் டாப்ஸி ஜொலிப்பதற்கு காரணம் அவரது டயட். இந்த டயட்டுக்காக தன் டயட்டீஷியனுக்கு அவர் மாதா மாதம் கொடுக்கும் சம்பளம்தான் ஹார்ட் அட்டாக்கை வரவழைக்கிறது!

ஒரு பேட்டியில் கேஷுவலாக டாப்ஸி இதை தெரியப்படுத்தியிருக்கிறார்.‘‘பணம் செலவு பண்றதுல எங்கப்பா ரொம்பவே கெடுபிடி. தேவையில்லாம செலவு பண்ண விடவே மாட்டார். சின்ன வயசுல ஃபாதர்ஸ் டேவை கொண்டாட பத்து ரூபாய்க்கு ஒரு பேனா வாங்கி அவருக்கு கொடுத்தேன். ‘ஏன் இப்படி பணத்தை வீண் பண்றே’ன்னு என்னை கண்டிச்சார்.

அப்படிப்பட்ட அப்பாகிட்ட என்னோட டயட்டீஷியனுக்கு மாசம் ஒரு லட்சம் கொடுக்கிறேன்னு சொன்னா அவர் சும்மா இருப்பாரா?! எகிறிக் குதிச்சார்.
‘நடிகை ஃபிட் ஆக இருக்கணும் பா’னு அவரை சமாதானப்படுத்தினேன்...’’ என்று புன்னகைக்கிறார் டாப்ஸி!  

காம்ஸ் பாப்பா