கன்டன்ட் தேசம்!
கடந்த 4 நான்கு மாதங்களில் வெளியான 3 மலையாளப் படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இப்படங்கள் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படவில்லை. பெரிய கமர்ஷியல் நடிகர்கள், நடிகைகள் நடிக்கவில்லை. இந்த பட்டியலில் இருக்கும் முதல் படம், விபின் தாஸ் இயக்கி இருக்கும் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’. தர்ஷனா ராஜேந்திரன், டைரக்டர் பசில் ஜோசப் நடித்திருக்கும் இப்படம் பெண்களுக்கு அவசியமான உரிமையை நகைச்சுவையாகக் காட்டியிருக்கிறது.
அடுத்து, ‘மாளிகப்புரம்’. உன்னி முகுந்தன், தேவ நந்தா, பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஒரு சிறுமி, சபரிமலைக்குப் போக விரும்புகிறாள். கெட்ட சக்திகள் தடுக்கின்றன. இதையெல்லாம் தாண்டி அவள் எப்படி சபரிமலைக்குப் போகிறாள் என்பதே கதை. இதன் இயக்குநர் விஷ்ணு சசி ஷங்கர்.
மூன்றாவது படம் ‘ரோமஞ்சம்’. அறிமுக இயக்குநர் ஜிது மாதவன் இயக்கியிருக்கும் ஹாரர் காமெடி படம் இது. பேச்சிலர்கள் சிலபேர் ஆன்மாக்களுடன் பேச ஓஜோ போர்டை வைத்து முயற்சிக்கும்போது என்ன நடக்கிறது என்பதே கதை. இந்த மூன்று படங்களும் கன்டன்ட்தான் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதைநிரூபித்திருக்கின்றன.
காம்ஸ் பாப்பா
|