இந்த பைக்கின் விலை ரூ.7.64 கோடி!
உலகின் முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனம், ‘ஹார்லி டேவிட்சன்’. ஒவ்வொரு பைக் பிரியரின் கனவே ஹார்லி டேவிட்சன் பைக்கைத் தன்வசமாக்குவதுதான். அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் 1903ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம். முதல் உலகப்போர், கடுமையான பொருளாதார வீழ்ச்சி, இரண்டாம் உலகப்போர், கொடிய தொற்றுநோய்களைத் தாண்டி இந்நிறுவனம் இயங்கியது. இன்றும் முன்னணியில் உள்ளது.
ஹார்லி டேவிட்சனின் வடிவமைப்பு, என்ஜினின் திறன், வேகம்... எல்லாமே மற்ற இரு சக்கர நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு முன்னோடியாக இருக்கிறது. சமீபத்தில் 1908ம் வருடம் தயாரிக்கப்பட்ட ஹார்லி டேவிட்சனின் பைக் ஒன்று 9.35 லட்சம் டாலருக்கு ஏலம் போயிருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் 7.64 கோடி ரூபாய். இதன் மூலம் அதிக விலைக்கு ஏலம் போன இரு சக்கர வாகனம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது ‘ஹார்லி டேவிட்சன்’.
சக்தி
|