கீழடி கெத்து!
கடந்த வாரம் கீழடி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்து தமிழர்களின் பழம்பெருமையை உலகிற்கு எடுத்துக் காட்டியிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். கீழடியில் நடந்த எட்டு கட்ட அகழாய்வில் கிடைத்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்களைக் கொண்டு ஆறு காட்சிக் கூடங்களாக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனுள் அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட தங்க காதணி, சுடுமண் பானைகள், உறைகிணறு, மீன் உருவம் பதித்த பானை ஓடு, தாயக்கட்டைகள், தானியம் சேமிக்கும் மண் குடுவைகள், முத்து, பவளம் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 2 ஏக்கரில், ரூ.18.43 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் தமிழர்களின் பண்பாட்டு நாகரிகத்தை பறைசாற்றி நிற்கிறது.
|