ராஷ்மிகாவின் ஆஃபர்!
வேறென்ன செய்ய என்று கேட்கிறார் ராஷ்மிகா. ஒரே பாட்டில் ஹீரோ பெரிய கோடீஸ்வரனாகி வாழ்க்கையில் ஜெயிப்பதுபோல் அறிமுகமான நான்கைந்து படங்களிலேயே தேசிய க்ரஷ் ஆனவர் ராஷ்மிகா. போதாதா... பாலிவுட் வாய்ப்புகள் தாமாக வந்து சேர்ந்தன. அமிதாப் பச்சனுடன் நடித்த ‘குட் பை’, அடுத்து ‘மிஷன் மஞ்சு’ ஆகிய இரு இந்திப் படங்களையும் விமர்சகர்கள் உச்சி முகர்ந்து கொண்டாடினார்கள். டப்பு? நஹி. வசூல் ரீதியாக அவ்விரு படங்களும் உதட்டைப் பிதுக்கியதால் ராஷ்மிகாவின் மார்க்கெட் இந்தியில் தள்ளாடுகிறது. இப்போது அவர் கைவசம் ‘அனிமல்’ இந்திப் படம் மட்டுமே இருக்கிறது. இந்தப்படத்தின் வரவேற்பைப் பொறுத்தே பாலிவுட்டா அல்லது கோலிவுட், டோலிவுட்டா என முடிவு செய்வார். அதேசமயம், இங்கே - தமிழ், தெலுங்கில் - வாய்ப்புகளைப் பறிக்க மண்டையை கசக்கியபடி ப்ளான் பண்ணுகிறார். அதில் ஒன்று ஆஃபர் சேல்! ஆம். சம்பள விஷயத்தில் ஆஃபர் தரத் தயாராக இருக்கிறாராம்!
காம்ஸ் பாப்பா
|