ராஷ்மிகா வழியில் சமந்தா!



மையோசிடிஸ் என்னும் ஆட்டோ இம்யூன் பிரச்னையால் பாதிக்கப்பட்ட சமந்தா இப்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.உடல்நலம் தேறியதால், மளமளவென, தான் ஒப்புக்கொண்ட வெப் சீரீஸ் மற்றும் படங்களின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்.அதில் முக்கியமான ஒன்று ‘சிட்டாடல்’ வெப் சீரீஸ். வருண் தவானுடன் இணைந்து நடிக்கும் இந்த வெப்சீரீஸின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது.

ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு அடிக்கடி ஃப்ளைட் பிடித்து பறக்க முடியாததால், மும்பையில் தற்காலிகமாக தங்கியிருந்து நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.இதனால் மும்பையில் சொந்தமாக ஒரு ஃப்ளாட்டை வாங்கியிருக்கிறார் என்கிறார்கள். 3 பெட்ரூம்கள் கொண்ட இந்த ஆடம்பர ஃப்ளாட்டின் விலை 15 கோடியாம்!சிறிது நாட்களுக்கு முன்புதான் பாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்பதற்காக ராஷ்மிகா மந்தனாவும் மும்பையில் ஒரு ஆடம்பர ஃப்ளாட்டை வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காம்ஸ் பாப்பா