ஒரு கிளிக் 2.4 கோடி லைக்ஸ்!



ஆம். ஒரேயொரு புகைப்படம் இணையத்தில் ஒரே நாளுக்குள் 2.4 கோடி லைக்ஸை அள்ளி சாதனை புரிந்திருக்கிறது.அது கால்பந்தாட்ட சூப்பர் ஸ்டார்களான மெஸ்ஸியும், ரொனால்டோவும் இணைந்து எடுத்திருக்கும் புகைப்படம்!louis vuitton நிறுவனத்தின் பிரீப்கேஸுக்காக எடுக்கப்பட்ட இந்த விளம்பரப் படத்தில் இருவரும் கால்பந்துக்கு பதிலாக செஸ் ஆடுகிறார்கள். அந்த நிறுவனத்தின் பிரீப்கேஸ் மீது செஸ் போர்ட் வைக்கப்பட்டிருக்க, இருவரும் செஸ் காயினை நகர்த்துவதற்காக தீவிரமாக யோசிப்பதுபோல் இப்
படம் எடுக்கப்பட்டுள்ளது.

போட்டி மைதானங்கள், விருது விழாக்களில் மட்டுமே பரஸ்பரம் சந்தித்துக்கொள்ளும் இந்த உச்ச நட்சத்திரங்கள் முதல் முறையாக ஒரு விளம்பரத்துக்கு இணைந்து போஸ் கொடுத்துள்ளதுதான் இப்படம் லைக்ஸ்களை அள்ளியதற்கு காரணம்.இது ஒருபுறம் இருக்க, உலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டியில் தங்கள் பிரிய நாயகர்கள் இருவரும் இதேபோல் இரு புறங்களிலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று வேண்டிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களின் ரசிகர்கள்.

காம்ஸ் பாப்பா