உதைக்கும் கத்துக்குட்டி அணிகள்!



பொதுவாக, ஒவ்வொரு உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலும் ஏதாவது ஒரு பெரிய அணியை வீழ்த்தி ஆச்சரியம் அளிக்கும் கத்துக்குட்டி அணி. ஆனால், இந்தக் கோப்பையில் பல பெரிய அணிகளை சிறிய அணிகள் வீழ்த்துவது பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. முதலில், நான்கு முறை உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி அணியை ஜப்பான் அணி எளிதாக வீழ்த்தியது. இதேபோல் ஃபிபா தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணியை மொராக்கோ அணி வீழ்த்தி பட்டியலில் முன்னேறியது.  

இதையெல்லாம்விட, உலகின் சிறந்த அணியும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுள்ள அணியுமான அர்ஜென்டினா, சவுதி அரேபியாவிடம் வீழ்ந்ததை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் சவுதி அரேபியா அணியைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் அந்நாட்டு மன்னர் ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளிப்பதாக செய்திகள் வெளியாகின. இதை சவுதி அணியின் பயிற்சியாளரான ஹெர்வ் ரெனார்ட் மறுத்திருக்கிறார். எது எப்படியோ... இறுதிப் போட்டிக்குள் நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்பது மட்டும் உண்மை.

பி.கே