மருத்துவ மாஃபியாவுடன் மோதும் பெட் லவ்வர் பிரியா!



‘பருத்திவீரன்’ பிரியா மணி சினிமாவுக்கு வந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அதே இளமையுடன் நடித்திருக்கும் படம் ‘DR 56’. கதை, திரைக்கதை எழுதி தயாரித்ததுடன் நாயகனாகவும் நடித்திருக்கிறார் பிரவீன் ரெடி. பான் இந்திய சினிமாவாக வெளிவரவுள்ள இதன் இயக்குநர் ராஜேஷ் ஆனந்த் லீலா. தமிழ், தெலுங்கில் ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.என்.பாலாஜி வெளியிடுகிறார்.

‘‘சினிமாவில் இவ்வளவு ஆண்டுகள் நான் நிலைத்திருக்க என் குருநாதர் பாரதிராஜாவின் கையால் குட்டு வாங்கியதுதான் காரணம்.பாக்கெட் மணிக்காக மாடலிங் செய்துகொண்டிருந்தவளை நாயகியாக்கி அழகு பார்த்தது அவர்தான். தொடர்ந்து, பாலுமகேந்திரா, மணிரத்னம், ராம்கோபால் வர்மா போன்ற ஆளுமைகளுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. தேர்ந்த நடிகையாக என்னை செதுக்கியதில் அவர்களுக்கு பங்கு இருக்கிறது... புன்னகைக்கிறார் பிரியா மணி.

சினிமா இப்ப யதார்த்தத்துக்கு மாறியிருக்கு. திருமணமான நடிகைகள் தொடர்ந்து ஹீரோயினா நடிக்கறாங்க. அப்படி எனக்கு கிடைத்த வாய்ப்புதான் ‘DR 56’. இது மருத்துவ உலகில் நிஜமா நடந்த, நடந்துகொண்டிருக்கும் சம்பவம்.
நான் பெட் லவ்வர். கதைல ஒரு நாய் முக்கிய கேரக்டரா வரும். போதாதா... மீ ஹேப்பி!மருத்துவ மாஃபியா கும்பலைப் பற்றிய இந்தப் படத்துல ஒரு சண்டைக் காட்சிலயும் நடிச்சிருக்கேன்...’’ என்கிறார் பிரியாமணி.

தொகுப்பு: எஸ்.ராஜா