பாபா ரிப்பீட்!



ரஜினி நடிப்பில் 2002ல் வெளியான ‘பாபா’, விரைவில் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி நடித்ததுடன் ரஜினியே படத்தை தயாரித்தும் இருந்தார்.
‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு இந்தப் படத்தை நான்காவது முறையாக இயக்கியிருந்தார் சுரேஷ் கிருஷ்ணா. அவதார புருஷரான பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்குத் தயாராகி உள்ளது.

இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங்  செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு ஃபிரேமும் மெருகேற்றப்பட்டுள்ளது. புதிய காட்சிகளுக்கு ரஜினி டப்பிங் பேசியுள்ளார்.‘‘பாடல்கள் அனைத்தும் புதிதாகவே ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளதால் மீண்டும் ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்குத் தரும்...’’ என்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.