இந்தியாவின் சூப்பர் ஹீரோ ஹனு-மேன்!



கன்னட சினிமாவில் கவனிக்கத்தக்க இடத்தில் இருப்பவர் இயக்குநர் பிரசாந்த் வர்மா. இவருடைய அடுத்த படைப்பாக வெளிவரவுள்ளது ‘ஹனு-மேன்’.  ‘‘அனுமன் மிகப்பெரிய சூப்பர் ஹீரோ. அவர் சூப்பர்மேன் மற்றும் பேட்மேனை விட சக்தி வாய்ந்தவர். சிறுவயதிலிருந்தே எனக்கு புராணக் கதைகளைக் கேட்கவும் படிக்கவும் பிடிக்கும். என் முந்தைய படங்களிலும் புராணக் கதைகளின் குறிப்புகளை வைச்சிருப்பேன்.  

இப்ப இந்த ‘ஹனு-மேன்’ படத்துக்காக அஞ்சனாத்ரி என்ற கற்பனையான உலகை நிர்மாணிச்சிருக்கோம். ஸ்பெஷல் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருக்கும். ஏன்னா, ஹாலிவுட் ஸ்டூயோக்கள்ல அதை உருவாக்கியிருக்கோம்! இந்தப் படத்தை தயாரிக்கும் காலகட்டத்தில், நிச்சயம் மூணு படங்களை எடுத்திருக்க முடியும். அப்படியிருக்க எங்களை நம்பி வந்தார் ஹீரோவா நடிக்கற தேஜா சஜ்ஜா.

இதுக்கு முன்னாடி நானும் தேஜா சஜ்ஜாவும் ‘ஜோம்பி ரெட்டி’ல இணைஞ்சிருக்கோம். அவர் குழந்தை நட்சத்திரமா அறிமுகமாகி ‘ஜோம்பி ரெட்டி’ மூலமா நட்சத்திர நடிகரானார்.
நாயகியா நடிக்கும் அமிர்தாவை உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அவர் விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘பிகில்’ படத்துல நடிச்சிருக்கார்.எங்க மேல நம்பிக்கை வைச்சு பெரும் பொருட் செலவுல நிரஞ்சன் ரெட்டியும் ஸ்ரீமதி சைதன்யாவும் தயாரிச்சிருக்காங்க.  இந்தப் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘பாகுபலி’, ‘கார்த்திகேயா 2’ வரிசைல இடம்பிடிக்கும்னு நம்பிக்கை இருக்கு!’’ அழுத்தமாகச் சொல்கிறார் இயக்குநர் பிரசாந்த் வர்மா.