இந்த க்ளைமேட் சோர்வை அளிக்கிறதா..?
கட்டி அணைப்பதும் உடனடியாக மனநிலையை மாற்றும்.
ஆம் என்பதே பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும். காரணம் கோவிட்! கொரோனா தாக்கத்துக்குப் பிறகு உலக மக்களின் உடல்நிலையும் மனநிலையும் மாறியிருக்கிறது என்பதற்கு அத்தாட்சிதான் இப்பொழுதைய பருவநிலையில் மக்களுக்கு ஏற்படும் சோர்வு!

இதிலிருந்து மீளவும் இந்த சீசனில் உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ளவும் இந்த வழிகளை நீங்கள் பின்பற்றினால் போதும்!முதலில் நீங்கள் உடுத்தும் உடைகளில் ‘ஹாப்பி கலர்ஸ்’ இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
அதையே பயன்படுத்துங்கள். அதாவது, ஆரஞ்சு, பீச், சிவப்பு, பிங்க், ஸ்கை ப்ளூ, இள மஞ்சள், ஆஃப் வொயிட், லைம் கிரீன், ஆலிவ் போன்ற பளிச், வெளிர், மென்மையான நிறங்களை உடுத்துவதால் உங்கள் மனநிலை மகிழ்ச்சியாக மாறும்.பிறகு அரோமா எசன்ஸ், ஆயில், வாசமான பாடி வாஷ், வாசமான டியோடரன்ட் பயன்படுத்துவதும் உங்களை உற்சாகமாக்கும்.
குளிர் உணவுகளுக்கு விடை கொடுத்துவிட்டு இளஞ்சூடான, சூடான உணவுகளைச் சாப்பிடுங்கள். பிளாக் டீ, காபி, கிரீன் டீ, சுக்கு, மிளகு டீ, புதினா டீ போன்றவை அருந்தினால் புத்துணர்ச்சி பூக்கும்.மசாஜ் எடுத்துக்கொண்டால் உடனடியாக மனநிலை மாறும்.
ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கும். அதற்காக மசாஜ் பார்லரைத் தேடிச் செல்ல வேண்டுமென்று அவசியமில்லை! உங்கள் உடம்பை நீங்களே பிடித்து விடலாம் அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களை வைத்து உங்கள் உடலை மசாஜ் செய்ய வைக்கலாம்; நீங்களும் அவர்களுக்கு மசாஜ் செய்யலாம்.
இளஞ்சூடான நீர் குளியல், நறுமணம் மிக்க பாத்டப் போன்றவையும் மனநிலையை மாற்றும். பாத் டப் இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம். மிதமான சுடுநீரில் குளியுங்கள். பிடித்தமான உறவுகள், நண்பர்களுடன் பேசுங்கள். டிஜிட்டல் உலகுக்கு முற்றிலுமாக இல்லாவிட்டாலும் சில மணி நேரங்களாவது விடை கொடுங்கள். நண்பர்கள், உறவினர்களுடன் நேரத்தைச் செலவழியுங்கள்.
கட்டி அணைப்பதும் உடனடியாக மனநிலையை மாற்றும். இதைப் பலரும் கட்டிப்பிடி வைத்தியமாகவே கடைப்பிடிக்கலாம்.செல்லப் பிராணிகளுடன் அதிக நேரத்தை செலவழியுங்கள். நாய், பூனை, முயல், கிளி போன்றவை உங்கள் மனநிலையை வெகு விரைவில் மாற்றும்.கொஞ்சம் உடலை அங்கும் இங்கும் அசைத்து உடற்பயிற்சி செய்வதோ பாடல்களுக்கு நடனம் ஆடுவதோ செய்யலாம்.டிவி, மொபைலில் மூழ்குவதைவிடக் காலை சூரியன், மாலை சூரியனில் நடைப்பயிற்சியோ விளையாடுவதோ தோட்ட வேலைகள் செய்வதோ நல்லது.
உங்களுக்குப் பிடித்த சுவையான உணவுகளை வீட்டில் நீங்களே தயார் செய்யுங்கள். விருப்பத்துடன் உண்ணுங்கள்.ஃபுட் மசாஜ், ஹெட் மசாஜ், பாடி மசாஜ், பெடிகியூர், மெனிகியூர், ஸ்பா போன்றவற்றைச் செய்துகொள்ளலாம்.மின்ட் டீ உங்கள் மனதை ரிலாக்ஸாக்கும். மின்ட் டீ, லாவண்டர் டீ மனதை ரம்மியமாக்கும்.பயம், மன உளைச்சல் நீங்க பெயின்டிங், எம்ப்ராய்டரி, ஆர்ட் வேலைகள்... என விருப்பத்துக்கு ஏற்ப நேரம் செலவழியுங்கள்.
பாசிட்டிவ் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். மேனிஃபஸ்டேஷன், தியானம், யோகா, புத்தகங்கள் படிப்பது போன்றவற்றைச் செய்யலாம்.வேலையைத் தொடர்ந்து செய்யாமல் சின்னச் சின்னதாக மினி பிரேக் எடுங்கள். நடந்து செல்வது, கேட்பது, ஆடியோ ஸ்டோரிஸ் கேட்பது, உடலை ஸ்ட்ரெச் செய்வது, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவது போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். நமது உற்சாகம் நம் கையில் என்பதை மறக்காதீர்கள்!
ஜான்சி
|