விண்வெளிக்கு புல்லட் ரயில்!



ஒரு காலத்தில் மனிதனால் விண்வெளிக்குச் செல்ல முடியுமா என்பதே பதில் தெரியாத கேள்வியாக இருந்தது. இன்று விண்வெளிப் பயணம் என்பது கடந்துபோகும் ஒரு செய்தியாகிவிட்டது.
மக்களை விண்வெளிக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டங்களுக்கான ஆராய்ச்சிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் பூமியிலிருந்து நிலாவுக்கும், வியாழனுக்கும் செல்வதற்காக பிரத்யேகமான புல்லட் ரயிலை வடிவமைக்கப்போவதாக அறிவித்துள்ளனர் ஜப்பானிய நிபுணர்கள்.

ஒரு கோளிலிருந்து இன்னொரு கோளுக்கு விண்கலம் மூலமாக மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும் என்ற நிலையில் ஜப்பானியர்களின் இந்த அறிவிப்பு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஜப்பானில் ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள், பாலங்கள், மின்சார உற்பத்தி நிலையங்கள், அணைகள் என பல கட்டுமானங்களைக் கட்டிய கஜிமா கார்ப்பரேஷன் நிறுவனமும்,  கொயோட்டா பல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளியியல் துறையைச் சேர்ந்த நிபுணர்களும் இணைந்து விண்வெளிக்குச் செல்லும் புல்லட் ரயிலை வடிவமைக்கப் போகின்றனர்.

இந்த விண்வெளி ரயில் போக்குவரத்துக்கு ‘ஹெக்ஸகன் ஸ்பேஸ் டிராக் சிஸ்டம்’ என்பது பெயர். 2050க்குள் விண்வெளி ரயில் தயாராகிவிடும் என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டுகிறது ஜப்பான்.

த.சக்திவேல்