கணவர் டிரைவர்... மனைவி கண்டக்டர்!



கேரள மாநில சாலைப் போக்கு வரத்துக் கழகத்துக்குச் சொந்தமாக 6,241 பேருந்துகள் உள்ளன. இந்தப் பேருந்துகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் உள்ள 6,389 பாதைகளில் பயணித்து மக்களுக்கு பயணச் சேவையை வழங்குகிறது. தினமும் சுமார் 31 லட்சம் பேர் இதில் பயணிக்கின்றனர். இந்த ஆறாயிரம் பேருந்துகளில் ஆலப்புழாவில் உள்ள ஹரிபாத் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் ஒரு பேருந்து ரொம்பவே ஸ்பெஷல்.

இந்தப் பேருந்தில் தாரா என்ற பெண் நடத்துநர் பணி செய்ய, டிரைவராக இருக்கிறார் கிரி. மட்டுமல்ல, பயணிகளின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா, பயணத்தை  மகிழ்ச்சியாக்க இசை, அலங்கரிப்பு என தனியார் பேருந்தைப் போல ஜொலிக்கிறது இந்தப் பேருந்து. இதை அனைத்தையும் தங்களது சொந்தப் பணத்திலிருந்து செய்திருக்கின்றனர் கிரியும், தாராவும்.

இருபது வருடங்களுக்கு முன்பு காதலிக்க ஆரம்பித்த கிரியும், தாராவும் கொரோனா லாக்டவுனில்தான் திருமணம் செய்திருக்கின்றனர். இவர்களின் காதல் தனிக்கதை.  கணவனும் , மனைவியும் சேர்ந்து இயக்கும் பேருந்தைப் பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை அள்ளியிருக்கின்றது.

த.சக்திவேல்