நன்கொடையாக ரூ.600 கோடி!
உத்தரப்பிரதேசத்தில் உள்ள மொராதாபாத் நகரைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் தொழில் அதிபர், அரவிந்த் கோயல். சில வருடங்களுக்கு முன்பு ஒரு டிசம்பர் மாதத்தில் ரயிலில் பயணம் செய்திருக்கிறார். அப்போது வயதான ஒருவர் குளிரிலும், உடல் நிலை சரியில்லாமலும் நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார் அரவிந்த். அந்த நபருக்குக் கொடுக்க கோயலிடம் எதுவுமில்லை. அதனால் தனது காலணியைக் கொடுத்திருக்கிறார். ஆனால், குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தவரின் நிலை மோசமாகிக்கொண்டே சென்றது.

இந்தச் சம்பவம் கோயலின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. ஆம்; கடந்த 50 வருடங்களாக தனது கடின உழைப்பினால் சேர்த்து வைத்த சொத்துகளை ஏழைகளுக்கு உதவுவதற்காக உத்தரப்பிரதேச அரசிடம் வழங்கியிருக்கிறார் கோயல்.
அந்தச் சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ.600 கோடி. கோயலின் இந்த முடிவுக்கு அவரது குடும்பமும் உறுதுணையாக இருந்தது ஹைலைட். இப்போது அவருக்கு ஒரு வீடு மட்டுமே மிஞ்சியிருக்கிறது. மட்டுமல்ல, கொரோனோ லாக்டவுனில் 50 கிராமங்களைத் தத்தெடுத்து, உணவு, மருத்துவம் போன்ற இதர அடிப்படை வசதிகளைச் செய்து தந்திருக்கிறார் கோயல் என்பது குறிப்பிடத்தக்கது.
த.சக்திவேல்
|