பிசினஸ் ஆக மாறிவிட்ட பிரபலங்களின் திருமணங்கள்!



முப்பத்தி மூன்று வயது விக்கிக்கும், 38 வயது என்று நம்பப்படும் கத்ரினாவுக்கும் நடந்து முடிந்த திருமணம் தொடர்ந்து paid  செய்திகளாக, பிராண்ட்களின் முன்னெடுப்பாக வந்தன; வருகின்றன.
செலிப்ரிட்டி திருமணங்கள் எல்லாம் முழு வணிகம் சார்ந்து என்றோ மாறிவிட்டது. பணம் பணத்தையே சேரும் என்ற ஆற்றொழுக்கு அடிப்படையில்தான் அவர்களின் காதல்கள் கூட அமைகின்றன. சாதி சார்ந்து, நிலம், வங்கி சேமிப்பு, வேலை செய்யும் இடம் என்றெல்லாம் பார்த்து பெரும்பான்மையான திருமணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்திய சமூகத்தின் அங்கத்தினரான நாம், இதையெல்லாம் கீழாக பார்க்க தகுதியில்லாதவர்கள்தாம். இருந்தாலும் இதன் பரப்பு நம்மைச் சுற்றியிருப்பவரின் கண்ணோட்டத்தையும் பாதிக்கிறது.

‘தாராள பிரபு’ போன்ற ஒரு சின்ன படத்தில் வரும் திருமண பாட்டைப் பார்த்தே அதன் பின்னர் நடந்த திருமணங்களில் வழுக்கை விழும் தலைக்காகவும், ஸ்டைலாகவும் அந்த பாணி தலைப்பாகை அணிய ஆரம்பித்த கல்யாண மாப்பிள்ளைகளை பார்த்தோம். இந்த திருமணங்களினால் உருவாகும் பிராண்ட் வேல்யூ இந்தியாவின் ஒட்டுமொத்த திருமண மார்க்கெட்டையும் பாதிக்கிறது. விராட் - அனுஷ்கா சர்மா திருமணத்திற்குப் பிறகு sabyasachi திருமண ஆடைகள் என்பது மேல் நடுத்தர வர்க்கம் மற்றும் உயர்தட்டின் விருப்பமாக மாறிவிட்டது. சில நட்சத்திரங்களின் திருமணங்கள் நடந்த ரிஸார்ட்டுகள் அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து புக் ஆகின.

அடுத்து காதல் பெரிதாக இல்லாமல் உருவான power couples தோன்றும் விளம்பரங்கள் மார்க்கெட்டில் மேலே மேலே அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. இதில் முன்னணியில் இருப்பது தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி. ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம் நடக்கும் பட்சத்தில் அது இன்னொரு சில நூறு கோடி மார்க்கெட்டை உருவாக்கும். இதில் தோல்வியுற்ற பவர் ஜோடி கணக்குகளும் உண்டு, சமந்தா - நாக சைதன்யா போல.

தங்கள் ஓரினச்சேர்க்கையை மறைக்க இன்னொரு பிரபலத்தை திருமணம் செய்துகொண்டு நார்மல் ஜோடியாக காண்பித்து தங்கள் இமேஜை உயர்த்திக் கொள்பவர்களை beard என்று சொல்வார்கள். பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொண்ட நிக் ஜோனாஸை பல காலமாக இப்படித்தான் சொல்கிறார்கள். அந்த திடீர் காதல், உடனடி திருமணம் என்பது பலரால் இப்படித்தான் பார்க்கப்படுகிறது. பிரியங்கா சோப்ரா இவ்வாறு செய்யக்கூடியவர் என்றுதான் பலரும் நம்புகிறார்கள். இவர்களும்  பெரிய அளவு மார்க்கெட் உருவாக்குபவர்களாக மாறுகின்றனர்.

ஆனால், என்றுமே கத்ரினா கைப் மேல் ஒரு வியப்பு பலருக்கு உண்டு. Children of God போன்ற cultஇல் வளர்ந்து பல தடைகளை உடைத்து தானிருக்கும் நிலையை அடைந்திருக்கிறார். அவரின் இளமைக்காலம் இன்று வரை மறைக்கப்பட்டதுதான். சல்மான் கானின் கேர்ள் ஃபிரண்டாக மாறுவதற்கு முன்பு - ‘Boom’ படத்திற்கு முன்பு - அவர் லண்டனில் என்ன செய்து
கொண்டிருந்தார் என்பதை ஓரளவு பூடகமாக பலரும் சொல்லிவிட்டார்கள்.

அந்நிலையில் இருந்து பாலிவுட்டின் கனவுக் கன்னியாக மாறி ஆண் நடிகர்களே சொதப்பும் இடமான பணச் சேர்க்கையில் பின்னி எடுக்கிறார். Nykaa நிறுவனத்தில் அவரது பங்கு மட்டும் 20 கோடிக்கு மேல் என்கிறார்கள். அதில்லாமல் அவரது வருமானம், சொத்து என நூறு கோடி தொடும். அடிமட்டத்திலிருந்து மேலெழுபவர்களிடம் உள்ள cut throat அறிவு எம்பிஏ படித்த நடிகர் நடிகைகளுக்குக் கூட இருப்பதில்லை.

விக்கி கவுஷல் ஒரு பாலிவுட் அர்ஜுன், அவ்வளவுதான். ‘மணமர்சியான்’ மற்றும் ‘மசானி’ல் சிறப்பாக  நடித்திருந்தார். ‘Uri the surgical strike’ போன்ற படங்கள் பிரதமரின் நவீன நாயகன் இமேஜை மறைமுகமாகக் கட்டமைத்தன. ‘சர்தார் உத்தம்சிங்’ அவரது நடிப்புக்கு பெயர் சொல்கிறது. பாலிவுட் முழுக்க  லவ் ஜிகாத் நடக்கிறது என்று தீவிர இந்துத்துவர்கள் சொல்லும் குற்றச் சாட்டை இந்த  திருமணம் இன்னும் கேலிக்குள்ளாக்குகிறது. If anything, it’s the opposite. The great fat Indian wedding செய்து முடித்த தம்பதிக்கு வாழ்த்துக்கள்.

கிருஷ்ண துவைபாயனா