வாரத்துக்கு 4.5 நாட்கள் மட்டுமே வேலை!



இந்நிலையில் உலகிலேயே முதல் முறையாக வாரத்துக்கு 4.5 நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும் என்று சட்டம் இயற்றி அசத்தியிருக்கிறது ஐக்கிய அரபு நாடுகள். இது வெளிநாடுகளிலிருந்து வேலைக்காக அங்கே வந்த அயல்நாட்டினருக்கும் பொருந்தும். இதற்கு முன்பு வளைகுடா நாடுகளிலேயே வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு அன்று விடுமுறை கொடுத்த ஒரே நாடு ஐக்கிய அரபு நாடுகள்தான். திங்கள் முதல் வெள்ளி மதியம் வரை வேலை செய்தால் போதும்.

வெள்ளி மதியத்துக்குப் பின் மசூதியில் பிரார்த்தனைகள் முடிந்த பின் ஆரம்பிக்கும் விடுமுறை திங்கள் காலை வரை நீடிக்கும். இதை தேசிய அளவில் எல்லோருமே பின்பற்ற வேண்டும். ஐக்கிய அரபு நாட்டின் குடிமகன்கள் மட்டுமல்லாமல் அங்கே வசிக்கும் பிற நாட்டினரும் வேலைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், குடும்பத்துக்கும் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்தச் சட்டம்.

த.சக்திவேல்