Data Corner



*பிரான்ஸ் நாட்டுக்கு அடுத்ததாக அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடாக ஸ்பெயின் உள்ளது. இந்நாட்டுக்கு ஆண்டு தோறும் சராசரியாக 82.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

*உலகின் முதல் நவீன நாவல், 1605ம் ஆண்டில் ஸ்பானிஷ் மொழியில்தான் எழுதப்பட்டது.

*விமான நிறுவனங்கள் ஆண்டுதோறும் 640 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டி வருகின்றன.

*யானைகளால் தம்தும்பிக்கையில் 8 லிட்டர் தண்ணீர் வரை வைத்திருக்க முடியும்.

*உலகெங்கிலும் 544.6 மில்லியன் ஏக்கர்களில் கோதுமை பயிரிடப்படுகிறது.

*இந்தியாவில் 6.2 கோடி தெருநாய்கள் இருப்பதும், 91 லட்சம் பூனைகள் ஆதரவற்ற நிலையில் தெருவில் விடப்பட்டுள்ளதும் தெரியவந்தது. 88 லட்சம் தெருநாய்களும், பூனைகளும் காப்பகங்களில் பராமரிக்கப்படுகின்றன.

*2020 - 21ம் ஆண்டில், இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் முறையே ரூ.19,564 கோடி மற்றும் ரூ.5,116 கோடி இழப்பை சந்தித்துள்ளன.

*இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவு உருவாக்கம், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 21.8%.

சுடர்க்கொடி