கைத்தறி என்றால் அது கோ-ஆப்டெக்ஸ்தான்!
தீபாவளி என்றாலே ‘கோ-ஆப்டெக்ஸ்’தான். பாரம்பரிய கைத்தறி துணிகளை வாங்க ‘கோ- ஆப்டெக்ஸி’ல் மக்கள் கூட்டம் அலைமோதும். 86 வருடங்களாக கைத்தறி நெசவாளர்களுக்குத் தொடர் வேலை வாய்ப்பை வழங்கிவருகிறது ‘கோ- ஆப்டெக்ஸ்’. தவிர, 1055 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 194 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களையும் தன்னுடைய அங்கத்தினராக இணைத்து, அவர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களைக் கொள்முதல் செய்து வருகிறது ‘கோ- ஆப்டெக்ஸ்’.
இதற்கு இந்தியா முழுவதும் 155 விற்பனை நிலையங்கள் இருக்கின்றன. இதில் 106 நிலையங்கள் தமிழ்நாட்டையும், 49 நிலையங்கள் மற்ற மாநிலங்களையும் அலங்கரிக்கின்றன. 2014லிருந்து ஆன்லைனிலும் விற்பனையைத் தொடங்கி, உலகம் முழுவதும் தமிழகத்தின் பாரம்பரிய கைத்தறி ஆடைகளைக் கொண்டு சேர்க்கிறது. தேசிய வடிவமைப்பு மையம் (NID) மற்றும் தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்பக்கல்லூரியில் (NIFT) பயின்ற ஆடை வடிவமைப்பாளர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடை ரகங்களை இந்த தீபாவளிக்கு விற்பனை செய்கிறது ‘கோ- ஆப்டெக்ஸ்’.
காஞ்சிபுரம், திருபுவனம், ஆரணி, சேலம், கோயம்புத்தூர் பட்டுச் சேலைகள், நெகமம், செட்டிநாடு, திண்டுக்கல், பரமக்குடி, ஜெயங்கொண்டம் பருத்திச் சேலைகள்... என ஏராளமான ரகங்கள் ‘கோ-ஆப்டெக்ஸி’ல் கொட்டிக்கிடக்கின்றன.
|