பக்கெட் லிஸ்ட்
மனதை நெகிழ்விக்கும் மராத்திபடம், ‘பக்கெட் லிஸ்ட்’. ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது.இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறாள் மதுரா. பாட்டி, மாமனார், மாமியார், கணவன், மகன், மகள் என்று அவளது குடும்பம் பெரியது. சில மாதங்கள் ஓய்வுக்குப்பிறகு காலையில் எழுந்தவுடன் சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது, மறுபடியும் சமைப்பது என அவளது நாட்கள் செல்கின்றன.
இந்நிலையில், விபத்தில் மரணமடைந்த சாய் என்ற 20 வயது பெண்தான் தனக்கு இதயத்தைக் கொடையாகக் கொடுத்திருக்கிறாள் என்பதை அறியும் மதுரா, சாயின் வீட்டுக்குச் செல்கிறாள். பைக் ரேஸில் கலந்துகொள்வது, சமூக வலைத்தளங்களில் வைரலாவது... என ஏராளமான ஆசைகளை 21 வயதுக்குள் நிறைவேற்றுவதாக ஒரு பட்டியல் வைத்திருந்தாள் சாய். அதற்குள் இறந்துவிட்டாள். சாயிக்கு 21 வயதாக 6 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன.
சாயின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக சபதம் எடுக்கிறாள் மதுரா. 20 வயது பெண்ணின் ஆசைகளை, 40 வயது பெண் எப்படி நிறைவேற்றுகிறாள் என்பதே திரைக் கதை. மென்மையாக நகரும் திரைக்கதை ஃபீல் குட்டாக முடிவது சிறப்பு. மதுராவாக கலக்கியிருக்கிறார் மாதுரி தீட்சித். படத்தின் இயக்குநர் தேஜஸ் பிரபா.
|