Data Corner



*உலகின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கை இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ளது.

*பூனைகள் நாளொன்றுக்கு 16 மணிநேரம் வரை தூங்குகின்றன. அவை தங்களின் வாழ்க்கையில் சுமார் 70% தூங்கிக் கழிக்கின்றன.

*உலகில் உற்பத்தியாகும் சர்க்கரையில் 80% கரும்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

*டூத் பிரஷ்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்னும் மருத்துவர்களின் கருத்தை மீறி உலகில் 24% பேர் தங்கள் டூத் பிரஷ்களை வாழ்க்கைத் துணையுடன் பகிர்ந்துகொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

*பென்குயின்களால் தண்ணீருக்கு அடியில் 6 ஆயிரம் அடிவரை செல்ல முடியும்.

*மனிதர்களைப் போலவே நாய்களும் கனவு காணும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

*உலகில் மொத்தமாக தேவைப்படும் மிளகாயில் பாதி சீனாவில் விளைகிறது.

*டென்னிஸ் பந்தின் எடை 59.4 கிராம்.

*உலகில் தற்போது சுமார் 1.2 பில்லியன் கார்கள் உள்ளன.

*பென்குயின்கள் இரை தேடுவதற்காக 50 கிலோமீட்டர் தூரம்வரை நீந்திச் செல்லும்.

சுடர்க்கொடி