சாக்லேட் சிற்பம்



இன்ஸ்டா

கிராமை கலக்கிக்கொண்டிருக்கும் சமையல் கலைஞர் அமுரி குய்சோன். விதவிதமான கேக், சாக்லேட்டுகளை செய்வதில் கில்லாடி. இவரது சமையல் நிபுணத்துவத்துக்காக இன்ஸ்டாகிராமில் 36 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

கொரோனா லாக்டவுனில் வித்தியாசமாக ஏதாவது செய்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று நினைத்தார் அமுரி. இதற்காக ரசிகர்களிடமே ஆலோசனை வழங்கச்சொல்லி வேண்டுகோள் விடுத்தார்.  கடைசியில் சாக்லேட்டில் ஏதாவது ஒரு விலங்கை சிற்பம் போல வடிக்க வேண்டும் என்ற ஐடியா அவருக்குக் கிடைத்தது. நல்ல ஐடியாவாக இருக்கிறதே என்று அமுரியும் களத்தில் இறங்கிவிட்டார்.

ஆனால், ஆரம்பத்தில் அவர் நினைத்தது போல வரவில்லை. இரவு - பகல் பாராமல் ஐந்து நாட்கள் கடுமையாக உழைத்து சிங்கம் போன்ற வடிவில் ஒரு சாக்லேட் சிற்பத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறார் அமுரி. 5.8 இன்ச் உயரத்தில் 36 கிலோ எடையில் நிஜ சிங்கம்போல காட்சி தருகிறது இந்த சாக்லேட் சிற்பம். ‘‘அடுத்து என்ன செய்யலாம்...’’ என்று இன்னொரு வேண்டுகோளை வைத்திருக்கிறார் அமுரி.

த.சக்திவேல்