சாக்லேட் மலைகள்பிலிப்பைன்ஸில் போஹோல் மாகாணத்துக்குள் நுழைந்தாலே போதும், அந்த அதிசய இடத்துக்கு வழிசொல்வார்கள். எதற்கும் பயப்படாமல் அடர்ந்த காட்டுக்குள் இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். இடத்தை அடைந்ததும் சுமார் 1,800 அழகழகான மலைக்குன்றுகள் நம்மை வரவேற்கும்.

கூம்பு வடிவிலான அந்த குன்றுகள் 50 சதுர கிலோ மீட்டர் வரை பரந்து விரிந்திருக்கிறது. பச்சைப்புற்கள் மலையைச் சுற்றி படர்ந்துள்ளன.
இந்தக் காட்சி தனி அழகு என்றால், கோடை காலத்தில் வேறு விதமான அழகு சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிறது.

ஆம்; கோடை காலத்தில் அந்தப் புற்கள் வாடி பழுப்பு நிறத்துக்கு மாறிவிடுகிறது. ஒவ்வொரு மலையும் ராட்சத சாக்லேட் போல காட்சி தருகின்றது! அதனாலேயே இதற்கு சாக்லேட் மலைகள் என்று பெயர்.

த.சக்திவேல்