Sexy Eye Secrets!‘‘பத்து பக்க டயலாக்கில் உள்ள விஷயத்தைக் கூட ஒரு சின்ன பார்வை ஈஸியா உணர்த்திடும். கண்களுக்கு அவ்ளோ பவர் இருக்கு.
ஸோ, கண்கள் bold eyes ஆக இருக்கணும்...’’னு நினைக்கறவர் நயன்தாரா. மஸ்காரா பயன்படுத்துவதற்கு முன்னால், ஐ கர்லர் வைத்து இமை முடிகளை சரிபார்த்துக் கொள்ளும் நயனுக்கு கண்களில் காஜல் அதிகம் தீட்டுவது பிடிக்காது. நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவு. இவைகளே கண்களைப் பாதுகாக்கும் என்கிறார் நயன்.

‘‘கண்கள்லதான் க்ளாமர் துள்ளும். இந்திய ஸ்டார்ஸ்ல நைன்டீஸ் காலகட்ட பாலிவுட் ஹீரோயின்ஸ் ரொம்பவே ஸ்பெஷல். அவங்க கண்களுக்கு காஜல் அதிகம் தீட்டி, மேக்கப்பையும் அதிகம் பண்ணி நடிச்சிருப்பாங்க. சமீபத்துல கூட நைன்டீஸ் ஹீரோயின்ஸ் மாதிரி நானும் கண்ணுக்கு காஜல் தீட்டி மேக்கப் போட்டு போட்டோ ஷூட்டெல்லாம் பண்ணினது மறக்க முடியாதது...’’ கண்களில் புன்னகைக்கிறார் பாலிவுட் சோனம் கபூர்.

‘‘சினிமாவுல நடிக்க வர்றதுக்கு முன்னாடி கண்களைப் பாதுகாக்க அவ்ளோ மெனக்கெட்டதில்ல. ஆக்ட்டிங்ல வந்த பிறகு சன் லைட், ஹெவி லைட்டிங், புழுதி பறக்குற ஏரியாவுல ஷூட்டிங் எல்லாம் தவிர்க்க முடியாதது. நம்ம ஸ்கின்னையும், ஐஸையும் எக்ஸ்ட்ரா கேர் எடுத்து பராமரிக்கறது அவசியமாகிடுச்சு. கண்கள் மட்டுமில்ல... கண்களுக்கு கீழே ப்ளாக் ரிங் ஆகாமல் பாத்துக்கறதும் அழகை அதிகரிக்கும்...’’ ரசனையாக டிப்ஸ் கொடுக்கிறார் ராஷி கண்ணா.

சன்னி லியோனின் கிறங்கடிக்கற கண்களுக்கு பின்னால் இருப்பவர் டிவினா நரங். பாலிவுட் ஹீரோயினைப் போல, இளமைத்துள்ளலுடன் இருக்கும் டிவினா, சன்னி லியோனின் பர்சனல் மேக்கப் உமன். லாஸ் ஏஞ்சல்ஸ், மும்பை என சன்னி பறக்கும் திசைகளில் டிவினாவும் கூடவே பறந்துவிடுகிறார்.
‘‘போல்டான வில் புருவத்தை விரும்பும் சன்னி, ஐ ஷேடோ பயன்படுத்துவதை விரும்புவதில்லை...’’ என்கிறார் டிவினா.

‘‘இரவு சரியான நேரத்துக்கு உறங்கச் செல்வதும், அதிகாலை எழுவதும் கண்களைப் பாதுகாக்கும். அதனாலேயே நைட் ஷூட் அவாய்ட் பண்ணிடுவேன். அப்படியும் நைட் ஷூட் கண்டிப்பா தேவைனா, அந்த படப்பிடிப்புக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி இருந்தே ‘நைட் ஷூட் இருக்கு... இருக்கு’னு எனக்குள்ளேயே சொல்லிக்குவேன். என்னை நானே ரெடி பண்ணிட்டு படப்பிடிப்புக்கு போவேன். மத்தபடி கண்களுக்கு ஸ்பெஷல் மேக்கப் எதுவும் பண்ணிக்கறதில்ல...’’ என டாப் கியரில் எகிறுகிறார் டாப்ஸி.

ஃபிட்னஸைப் போலவே, கண்களையும் பாதுகாப்பதில் கில்லாடி கேர்ள் தமன்னா. ‘‘நார்மலான டிராவல், வெளியே எங்காவது சின்ன ஜாகிங், வாக்கிங்னாலும் மேக்கப் பண்ணிக்கறதில்ல. கண்ணுக்கு மஸ்காரா, ஐ லைனரை பயன்படுத்தறது பிடிக்கும். ஐ மேக்கப்பின் போது, கன்னங்களுக்கும் கூடுதல் மேக்கப் போட்டால், நார்மல் ஐஸ் கூட குண்டு கண்களா கவர்ந்திழுக்க வைக்கும்...’’ என ஆச்சரியமூட்டுகிறார் தமன்னா.

திருமணத்திற்குப் பிறகும் கண்களாலேயே புன்னகைப்பவர் சமந்தா. ‘‘ப்யூர் வொயிட் கண்கள், பளபள ஸ்கின்னு இருக்க, ஹெல்த்தி ஃபுட்ஸ் ரொம்ப முக்கியம். நிறைய தண்ணீர், ஜூஸ் குடிப்பேன். புருவங்களுக்கு ஐ லைனர் பயன்படுத்த பிடிக்கும். வெளியே எங்க சுத்தினாலும், கண்டிப்பா சன் கிளாஸை கையோடு எடுத்துட்டு போயிடுவேன். அவ்ளோ கூலர்ஸ் இருக்கு. ஐ மேக்கப்ல ஐ லவ் டார்க் காஜல். திக்கா கருகருனு காஜல் பயன்படுத்தறது பிடிக்கும்..’’ என கண்களில் சிரிக்கிறார் சமந்தா.  

கிறிஸ்துமஸுக்காக லண்டன் பறந்திருக்கும் ராதிகா ஆப்தே, புது வருஷத்தையும் அங்கேயே கொண்டாடி இருக்கிறார். ஆப்தேவுக்கு ப்ளாக் அண்ட் வொயிட் பிடிக்கும் என்பதால், கண் இமைகளில் போல்டான ப்ளாக் ஐ ஷேடோ தீட்டுவதிலும் இஷ்டம். புருவங்களையும் பட்டையாக மினுமினுக்க வைக்க விரும்புவார். ‘‘உடம்பின் செக்ஸியான பகுதி எது?’’ என ராதிகா ஆப்தேவிடம் கேட்டால், சட்டென ‘‘ஐஸ்’’ என்பார் நைஸ் சிரிப்பில்!

‘‘கண்கள் விஷயத்தில் கெமிக்கல் எதுவும் பயன்படுத்தறதில்ல. ஆர்கானிக்தான் பெஸ்ட் சாய்ஸ்...’’ என தத்துவம் உதிர்க்கும் ரகுல், பழங்களில்
பப்பாளி அதிகம் உட்கொள்கிறார். ‘‘ஷூட்டிங் பிரேக்ல கூட, கண்களை மூடி எனர்ஜியை சேமிக்கலாம். கண்ணும் ஃப்ரெஷ் ஆகும். மைண்டும் புத்துணர்ச்சியாகிடும்...’’ என டிப்ஸை அள்ளி வீசுகிறார் ரகுல்.

மை.பா