ஜம்... கும்..!



பட்ஜெட் 2020 பற்றிக் கேட்டாலே ஹி... ஹி... என்று தலையைச் சொறிபவர்கள் மத்தியில் ‘குங்குமம்’ மட்டுமே இது ஒரு ‘நஹி’ என்கிற சகித்துக் கொள்ள முடியாத பட்ஜெட் என்று சுட்டிக்காட்டுகிறது.
- அமிர்பத்ரா, மடிப்பாக்கம்; ஆர்.ஜெ.சி, சென்னை; க.நஞ்சையன், பொள்ளாச்சி; கீதா, கோவில்பட்டி; மனோகர், கோவை; கதிரவன், மதுரை.

பட வாய்ப்புகள் கட்டாகி வரும் சூழலில் ஃபிட்டாக வேண்டுமென்று ஜிம்மில் ‘ஜம்’மென்று கலோரிகள் எரித்து வரும் காஜல் ‘கும்’மென்று வர வாழ்த்துகள்.
- ஜெர்லின், ஆலந்தூர்; கவுரிநாத், பரங்கிமலை; பப்பு, அசோக் நகர்; சக்கு ராம்கி, மடிப்பாக்கம்; பழனிகுமார், அசோக் நகர்.

ஊசிப்போன மாவில் சுட்ட தோட்டா ஜெகனின் பட்ஜெட் ஊத்தப்பம் வயிறை ஊத வைத்துவிட்டது. அடுத்த இதழ் ‘தொல்(லைக்) காப்பியத்'தில் ஸ்ட்ராங்காக ஒரு காபி போட்டுக் கொடுங்கள்.
- சந்திரமதி, சென்னை; கருணாகரன், போரூர்; பிரேமா குரு, சென்னை; ஜெயசந்திர பாபு, மடிப்பாக்கம்; ஆசிகா, வியாசர்பாடி.

பிச்சையெடுக்கும் சிறுவர்களுக்கு உதவுவதை தனது ‘கர்மா’வாக ஏற்றுச் செய்துவரும் ஆசிஷ் சர்மாவை ஒரு பொறியாளர் என்று சொல்வதை விட பிரச்னைகளைச் சரி செய்யும் நெறியாளர் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
- பிரேமா பாபு, சென்னை; நெல்லை குரலோன், பொட்டல்புதூர்; கதிர், கோவை; கலிவரதன், கீழ்க்கட்டளை; செம்மொழி, சேலையூர்.

கல்வித்துறையைப் பின்னோக்கி இழுக்கிற முயற்சியில் ஈடுபடுவோரை கரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளைப் போல தனிமைப் படுத்துவதே நல்ல முடிவுகளைக் கொண்டு வரும்.
- கோவிந்தராஜ், தில்லை கங்காநகர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; நிலவழகு, நீலாங்கரை; வேலு, உள்ளகரம்.

‘பாக்யா’ பத்திரிகையின் 32 ஆண்டு கால வரலாறு அதன் ஆசிரியர் கே.பாக்யராஜ் அவர்களின் திரைக்கதையைப் போலவே சுவாரஸ்யம்
குன்றாமல் இருந்தது.
- இலக்சித், மடிப்பாக்கம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; மனோகர், மேட்டுப்பாளையம்.

‘சைக்கோ’ உணர்வின் நச்சுத்தன்மை இரண்டு கண்களிலும் பொங்க, பிச்சி உதறிவிட்டார் ராஜ்குமார் பிச்சுமணி.
-  மியாவ்சின், கே.கே.நகர்; கீதா, கோவில்பட்டி; ராஜம் தம்பையா, மாம்பலம்; தா.சைமன் தேவா, விநாயகபுரம்.

‘ஃபேஸ்புக்’ வழியே சமூக சேவை செய்து வருகிற ‘மத்யமர்’ குழுவின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அதன் ‘ஃபேஸ்’கட்டை அழகாக்கி வருகின்றன என்றே சொல்ல வேண்டும்.
- ஜெயசந்திர பாபு, மடிப்பாக்கம்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; ஆதித்யா, திருவண்ணாமலை.

ரீடர்ஸ் வாய்ஸ்