இந்தக் கம்ப்யூட்டரின் விலை ரூ.37 லட்சம்!சமீபத்தில் ‘ஆப்பிள்’ நிறுவனம் மேக் ப்ரோ டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. கண்களை அகலத் திறக்க வைக்கும் இதன் விலை சுமார் ரூ.37 லட்சம். இந்தக் கம்ப்யூட்டரை அங்கேயும் இங்கேயும் நகர்த்துவதற்கு தனியாக சக்கரங்கள் உள்ளன. அது மட்டுமே ரூ.28 ஆயிரம்.

இசைக் கலைஞர்கள், சினிமா எடிட்டர்களுக்காக பிரத்யேகமாக இதை வடிவமைத்திருக்கின்றனர். இப்போது உலகின் விலையுயர்ந்த பர்சனல் கம்ப்யூட்டர் இதுதான். 256 ஜிபி ஸ்டோரேஜ். ஆனால், 4 டிபி வரை அதிகரித்துக் கொள்ள ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும்.

இதுபோக 32 ஜிபி ரேமை 1.5 டிபியாக மாற்ற மட்டுமே 17 லட்ச ரூபாய் செலவாகும். இந்த ரேம் மாற்றத்துக்கான செலவுதான் இவ்வளவு விலைக்கு காரணம். முக்கியமாக மானிட்டரைத் தனியாகத் தான் வாங்க வேண்டும். அதுவும் லட்சங்களில்தான் ஆரம்பம்!

த.சக்திவேல்