Data corner



*2018ல் 33,356 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 89 பாலியல் வன்கொடுமை குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக என்சிஆர்பி தெரிவித்துள்ளது.

*53% பாலியல் குற்றங்களுக்கு 2018ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பான்மையான வழக்குகள் விசாரணை நிலையிலேயே முடங்கியுள்ளன.

*கேரளாவின் மக்கள் தொகையில் சுமார் 8% பேர், அதாவது 25 லட்சம் பேர் புலம்பெயர்ந்தோர். இவர்கள் மேற்கு வங்கம் (20%), பீகார் (18.10%), அசாம் (17.28%) மற்றும் உத்தரப்பிரதேசம் (14.83%) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

*தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.57,000 கடன் தொகையை அதிமுக அரசு சுமத்தியுள்ளது.

*மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.10,000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தகவல்.

*2019ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், 16% சிறுத்தைகள் இறந்துள்ளன. இவை அனைத்துமே ரயில், சாலைபோக்குவரத்தில் அடிபட்டு
இறந்தவைதான்.

*1 லிட்டர் குவளை குடிநீர் (Bottled Water) விற்பதற்கு அதிகபட்ச விலை ரூ.13 என நிர்ணயித்துள்ளது கேரள அரசாங்கம்.

*2015ம் ஆண்டில் நியூசிலாந்துக்குப் பயணமான இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 25,000 என்கிறது அந்நாட்டு வெளியுறவுத் துறை.

*கிராமப்புற பெண் தொழிலாளர்களில் 73.2% விவசாயிகள், ஆனால் சொந்தமாக நிலம் வைத்திருப்போர் 12.8% மட்டுமே.

*நாடு முழுவதும் தினமும் 21 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் போடப்படுகின்றன. இது, விரைவில் 45 கி.மீ. ஆக அதிகரிக்கும்.

அன்னம் அரசு