இனி குழந்தைப்பேறு காலத்தில் கணவர்களுக்கும் விடுமுறை!
தலைப்பைப் படித்ததும் குஷியாக வேண்டாம். இந்த விடுமுறைக்குக் கொடுத்து வைத்தவர்கள் பின்லாந்து கணவர்கள்!புதிய பிரதமராக சன்னா மரின் பொறுப்பேற்ற பிறகு பின்லாந்தில் அதிரடியான மாற்றங்களைச் செய்து வருகிறார். ஒரு மாதத்துக்கு முன்பு ‘வாரத்தில் நான்கு நாட்கள் வேலை பார்த்தால் போதும்’ என்று ஆச்சர்யமான அறிவிப்பைத் தந்து அதிரவைத்தார். இப்போது அவரது அமைச்சரவையில் இருக்கும் சமூக சீர்திருத்தம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரான அய்னோவும் புதிதாக ஒரு அறிவிப்பைத் தந்துள்ளார். பின்லாந்தில் குழந்தைப்பேறு காலத்தில் பெண்களுக்கு வருமானத்துடன் ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு விடுமுறை கிடைக்கும். இப்போது இதிலும் சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கணவனுக்கும் குழந்தைப்பேறு விடுமுறையை வருமானத்துடன் அளிக்கப்போவதாக அய்னோ டுவிட்டியிருக்கிறார். ‘‘கணவர்களுக்கு அளிக்கப்படும் விடுமுறை, மனைவிக்கும் பிறந்த குழந்தைக்கும் உதவியாக இருக்கும். அது குடும்ப உறவுகளை இன்னும் வளமாக்கும்...’’ என்கிறார் அய்னோ.
த.சக்திவேல்
|