COFFEE TABLE



எமி ஹேப்பி

எப்படியிருக்கிறார் எமி ஜாக்சன்? உடனே லண்டனுக்குச் சென்றா விசாரிக்க முடியும்?

இன்ஸ்டாவில் எட்டிப் பார்த்தோம். குட்டி ஏஞ்சல் பெற்றபின், பழைய பாடி ஷேப்புக்கு வந்துவிட்டார் எமி. சமீபத்தில் கிழக்காப்பிரிக்காவில் உள்ள கடற்கரை தீவு ஒன்றுக்கு தன் கணவர், குழந்தையுடன் ஹாலிடே ட்ரிப் சென்றவர், அங்கே பிகினி போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்!அந்த ஹாட் புகைப்படத்தை கறுப்பு வெள்ளையாக இன்ஸ்டாவில் பதிவிட்டு ஹார்ட்டின்களை அள்ளிவிட்டார்.

லக்கி ஸ்டோர்

நியூயார்க்கில் ஹாட் டாக்கே, ஒரு மளிகைக் கடைதான். கடைக்குள் நுழைந்தவுடனே நம்மை வரவேற்கிறார் முதலாளி. ‘‘உங்களிடம் 10 ஆப்பிள் இருக்கிறது. அதில் 5 ஆரஞ்சுகளைக் கழித்துவிட்டால் மீதம் எவ்வளவு இருக்கும்...?’’ போன்ற சுலபமான கேள்விகளைக் கேட்பார். சரியான பதில் சொல்லிவிட்டால் உங்களுக்குச் சில நொடிகள் தருவார். அந்த நொடிகளுக்குள் கடையில் இருக்கும் விருப்பமான பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்!பொருட்கள் அனைத்தும் இலவசம். இந்த லக்கி ஸ்டோரை நோக்கி மக்கள் படையெடுக்கின்றனர்.

மீண்டும் வாக்மேன்

இசைக்காதலர்களுக்காக திரும்பவும் வந்துவிட்டது வாக்மேன். இசையை அதன் ஒரிஜினல் தரத்துடன் ரசிப்பதற்காக ‘சோனி’ நிறுவனம் இதை வடிவமைத்திருக்கிறது. இந்த வாக்மேனின் மாடல் ‘NW-A105’. உயர் ரக ஆடியோ பார்மேட்களைக் கூட இதில் கேட்க முடியும். தவிர, ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் முதல் வாக்மேன் இதுதான். விலை ரூ.23,990.

புதிய வேலைகளை உருவாக்கும் இந்தியா

இந்தியாவில் வேலையின்மை முக்கிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. அதனால் புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன மத்திய, மாநில அரசுகள்.‘‘வருடத்துக்கு 55 முதல் 65 லட்சம் புதிய வேலைகளை உருவாக்க வேண்டும். இப்படி 20 வருடங்களுக்குத் தொடர்ந்து உருவாக்கினால் மட்டுமே வேலையின்மையை ஓரளவுக்குச் சமாளிக்க முடியும்...’’ என்கிறது ஒரு பொருளாதார சர்வே.இந்நிலையில் 2011 முதல் 2018 வரை 2.62 கோடி வேலைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்கிங் பேபி

கன்னட ‘யூ டர்ன்’ நாயகிகளுள் ஒருவர் ராதிகா நாராயண். இன்னும் அவர் தமிழுக்கு வரவில்லை. சாண்டல்வுட்டிலேயே கமகமக்கிறார் ஜாலியாக!
சமீபத்தில் கோவா சென்ற ராதிகா, அங்கே கடற்கரையில் ஜாக்கிங் சென்று மகிழ்ந்துள்ளார். ‘‘பீச்சில் அதிகாலையில் ஜாக்கிங் செல்லும்
அனுபவத்தை வேறு எந்த ஒர்க் அவுட்டுடனும் ஒப்பிடமுடியாது...’’ என்று இணையத்தில் தட்டிவிட்டு சிலிர்த்திருக்கிறார்.l

குங்குமம் டீம்