காகித அப்பா



பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் 2வது மகனான ராம்பிரகாஷ் எழுதியிருக்கும் முதல் சிறுகதை இது!

மகாபலிபுரம். காலை 5.55 மணி.
‘‘கவின்... கவின்.... டேய் கவின்...’’ சக்தி அலறினான். இன்றைக்கு உதிக்கலாமா... வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த சூரியனை ஆவலாக, ஆர்வமாக ரசித்துக் கொண்டிருந்த கவின் கோபத்துடன் திரும்பினான்:‘‘என்னடா..? எதுக்கு இப்படி கத்தற..? பக்கத்துல வந்து சொல்லு...’’

‘‘ஏன்டா கோபப்படற..?’’‘‘கோபப்படாம... உன்ன கொஞ்சுவாங்களா? உனக்கே தெரியும்... ரொம்ப நாள் கழிச்சு ஃபிரெண்ட்ஸோடு டிரிப் வந்திருக்கேன், அதுவும் மனைவிகிட்ட பர்மிஷன் வாங்கி. இதை நல்லா அனுபவிச்சுட்டு இருக்கேன்... இந்த நேரத்துல இப்படி அலறி டிஸ்டர்ப் பண்றியே...’’
‘‘பேசுவடா பேசுவ... இந்த சக்தி கூப்பிடறதுக்கே இப்படி சலிச்சுக்கறியே... உன்னோட சக்தி கூப்பிடறாங்க... எங்க சலிச்சுக்க பார்க்கலாம்...’’
‘‘என்னடா சொல்றே... என்னோட சக்தியா..?’’

‘‘ஆமா... உன் போனை சைலன்ட் மோடுல வைச்சிருக்க போல... உன் ஒய்ஃப் எனக்கு கால் பண்ணாங்க... அதை சொல்லத்தான் உன்னைக் கூப்பிட்டேன்...’’‘‘சாரி சக்தி...’’ முணுமுணுத்த கவின், ‘‘மிருதுளா இப்ப எதுக்கு கூப்பிடறா...’’ என்றபடியே தன் ஐபோனைப் பார்த்தான்.
ஐந்து மிஸ்டு கால்கள் அவனை கோபமாகப் பார்த்தன.மிருதுளாவுக்கு டயல் செய்தான்.மறுமுனையில் ‘‘என்னங்க... உங்கள எவ்வளவு தடவை கூப்பிடறது...’’ சுருதி இல்லாமல் மிருதுளாவின் குரல் ஒலித்தது.

‘‘சாரிமா... போன் சைலன்ட்ல இருந்தது... எனிதிங் அர்ஜென்ட்..? ஆமா... ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு..?’’
‘‘பயங்கர தலைவலிங்க... அதுவுமில்லாம வாமிட்டிங், தலைசுத்தல்...’’‘‘மிருது... டாக்டர் கொடுத்த மருந்த விடாம சாப்பிடறியா இல்லையா..?’’
‘‘சாப்பிடறேன்... ஆனா, அதுக்கெல்லாம் இந்த தலைவலி கன்ட்ரோல் ஆகாது போல...’’ மறுமுனையில் மிருதுளா அழுகிறாள் என்பதை இங்கிருந்தே கவின் உணர்ந்தான்: ‘‘உடனே கார்ல கிளம்பி வரேன்... ஆனா, எப்படியும் நான் அங்க வர எட்டு மணி நேரமாகும்... அதுவரைக்கும் மேனேஜ் பண்ணிப்பல..?’’

‘‘அட... என்னங்க நீங்க..? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்... உங்க குரலைக் கேட்கணும்னு தோணிச்சு... அதான் கால் செஞ்சேன்... ரொம்ப நாளைக்கு அப்புறம் ஃப்ரெண்ட்ஸோட எஞ்ஜாய் பண்ணிட்டு இருக்கீங்க... சந்தோஷமா இருங்க... எனக்கு சரியாகிடும்... வந்து... போனை மட்டும் சைலன்ட்ல போடாதீங்க...’’ என்றபடி மிருதுளா போனை வைத்தாள்.கவின் தன் ஐபோனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
‘‘என்னடா ஆச்சு... எனிதிங் சீரியஸ்..?’’ அருகில் நின்றிருந்த சக்தி உலுக்கினான்.

‘‘நத்திங் சீரியஸ்...’’ கவின் சிரிக்க முயன்றான்: ‘‘மிருதுளாவுக்கு விடாம தலைவலிக்குதாம்... வாமிட்டிங்கும் இருக்குனு சொல்றா... கஷ்டப்படறானு நினைக்கறேன்...’’‘‘அப்ப உடனே கிளம்பு... நான் ரூமை செக் அவுட் பண்ணிட்டு வரேன்...’’‘‘இல்ல... இல்ல சக்தி... நீ இங்கயே இரு... ஃப்ரெண்ட்ஸுங்களுக்கு கம்பெனி கொடு... நாம ரெண்டு பேரும் ஒண்ணா எக்ஸிட் ஆனா நல்லா இருக்காது...’’
‘‘தனியா... நீ எப்படிடா..?’’

‘‘பழக்கமானதுதானே சக்தி... எத்தனை முறை தனியா டிரைவ் பண்ணியிருக்கேன்... டோன்ட் ஒரி... வரேன்...’’
பதிலை எதிர்பார்க்காமல் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு காருக்கு வந்த கவின், அதை ஸ்டார்ட் செய்து சாலைக்கு வந்தான். போக்குவரத்து ஓரளவு சாதகமாகவே இருந்து.கவனம் செலுத்தியபடி வண்டி ஓட்டியவன், இரண்டு மணி நேரத்துக்குப் பின் மிருதுளாவுக்கு டயல் செய்தான்: ‘‘வந்துகிட்டே இருக்கேன்... கவலைப்படாத...’’

‘‘ஏங்க... ஒரு தூக்கம் போட்டு இப்பதான் எழுந்தேன். ஃப்ரெஷ்ஷா இருக்கேன்... இதை உங்ககிட்ட சொல்லலாம்னு போனை எடுத்தேன். நீங்களே கூப்டுட்டீங்க...’’‘‘ஆர் யூ ஆல்ரைட்..?’’‘‘அதான் ஃப்ரெஷ்ஷா இருக்கேன்னு சொன்னேனே... நீங்க எதுக்கு கிளம்பினீங்க... நான்தான் தூங்கி எழுந்தா சரியாகிடும்... உங்க குரலை கேட்கத்தான் கூப்பிட்டேன்னு சொன்னேனே...’’
‘‘இட்ஸ் ஆல்ரைட் மிருது... இதோ வந்துட்டே இருக்கேன்...’’

‘‘சொல்பேச்சு கேட்கவே மாட்டீங்களே...’’ படபடவென மிருதுளா பொரிய ஆரம்பித்தாள்.
புன்னகையுடன் அதையெல்லாம் கேட்டபடி கவின் நிம்மதியானான்: ‘‘டிரைவ் பண்ணிட்டு இருக்கேன்... அப்புறம் கூப்பிடறேன்...’’
காலை கட் செய்தான். அதன்பிறகான பயணம் படபடப்புக்கும் நிம்மதிக்கும் இடையில் ஊசலாடியது.வீட்டை நெருங்க நெருங்க இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது.காரை பார்க் செய்துவிட்டு இறங்கினான். தாவிச் சென்று காலிங் பெல்லை அடித்தான்.

செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டே மிருதுளா கதவைத் திறந்தாள். ‘ஏன் வந்த?’ என சைகையால் கவினைப் பார்த்துக் கேட்டுவிட்டு தன் தலையில் அடித்துக் கொண்டாள்:‘‘வேற யாரு... உன் மாப்பிள்ளைதான்... ஆமா... உன் பொண்ணை விட்டு பிரிய முடியாம ஓடி வந்துட்டாரு... போதுமா? வை போனை... அப்புறம் கூப்பிடறேன்...’’ என்றபடி கவினிடம் இருந்த லக்கேஜை வாங்கினாள்.

‘‘இப்ப எப்படி இருக்கு மிருது..?’’ படபடப்பு குறையாமல் கேட்டான்.‘‘பார்த்தாலே தெரியலையாங்க... நல்லா இருக்கேன்...’’ புன்னகையுடன் ஹாலுக்குள் நுழைந்தாள்: ‘‘நீங்க வரேன்னு சொன்னதும் தலைவலி ஓடியே போச்சுனு நினைக்கறேன்...’’
மிருதுளாவைத் தொட்டு நிறுத்தி திருப்பினான்: ‘‘இஸ் இட்?’’‘‘ம்...’’ தலைகுனிந்தாள்.
அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான் கவின்.

‘‘ஷ்... என்ன இது வந்ததுமே... நம்ம பசங்க நம்மையே பார்த்துட்டு இருக்காங்க...’’ மிருதுளா சட்டென விலகினாள்.
‘‘ஹே... குட்டிகளா...’’ எதுவும் நடக்காததுபோல் தன் இரு குழந்தைகளையும் அள்ளி அணைத்தான்: ‘‘சேட்ட பண்ணாம இருந்தீங்களா... அம்மாவை டிஸ்டர்ப் பண்ணலையே..?’’‘‘இல்லப்பா...’’ பத்து வயது தியா சட்டென பதில் சொன்னாள். ‘‘அம்மாதான் ரொம்ப தவிச்சுப் போயிட்டாங்க...’’ லயா தன் பங்குக்கு பேசினாள்.‘‘ஆமாப்பா... தங்கச்சி சொன்னது சரிதான்... நேத்து பூரா அம்மா அப்படி கஷ்டப்பட்டாங்க. தலைய வலிக்குதே... தலைய வலிக்குதேனு சொல்லிட்டே இருந்தாங்க...’’

‘‘வலில அழுதுகிட்டே இருந்தாங்கப்பா...’’‘‘உடனே நானும் லயாவும் சாமிகிட்ட ப்ரே பண்ணினோம்... அதுக்கு அப்புறம் என்ன பண்றதுனு தெரியலை... அப்ப லயா என்ன செஞ்சா தெரியுமா..?’’ தியா நிறுத்தினாள்.‘‘என்னடா பண்ணின..?’’ லயா பக்கம் திரும்பி கவின் கேட்டான்.
லயா பேசாமல் நின்றாள்.‘‘பெரிய மனுஷி... எதுவும் சொல்ல மாட்டேங்கறா... நீயே சொல்லு தியா...’’
‘‘ஒரு பேப்பர்ல ஏதோ எழுதி அம்மாவோட தலைகாணிக்கு கீழ வைச்சுட்டா...’’‘‘அப்படியா..? அதுல என்ன எழுதினா..?’’

‘‘தெரியலைப்பா... ரகசியமா பென்சில்ல எழுதினா... என்னை பார்க்கவே விடலை... எங்க பிடுங்கிப் பார்த்தா கை காலை உதைச்சுகிட்டு அழ ஆரம்பிப்பாளோனு நான் பேசாம இருந்துட்டேன்...’’ மூச்சு வாங்க தியா சொல்லி முடித்தாள்.
‘‘இந்தக் கூத்தெல்லாம் நடந்ததா..? எனக்குத் தெரியவே தெரியாதே..?’’ மிருதுளா ஆச்சர்யப்பட்டாள்.
லயா எதுவும் பேசாமல் தரையைப் பார்த்தபடி இருந்தாள்.

‘‘சரிடா... நீ என்ன எழுதி வைச்சேன்னு அப்பா இப்ப போய் பார்க்கவா..?’’
லயா தலையசைத்தாள்.தியா, லயாவின் கரங்களைப் பற்றியபடி கவின் பெட்ரூமுக்குச் சென்றான். மிருதுளா பின்
தொடர்ந்தாள்.படுக்கை அறைக்குள் நுழைந்ததுமே கவினைப் பற்றியிருந்த தன் கரத்தை விடுவித்துக்கொண்டு லயா வேகமாக ஓடினாள்.
மிருதுளாவின் தலையணைக்கு அடியில் இருந்து துண்டுச் சீட்டை எடுத்துக் கொடுத்தாள்.

அந்த துண்டுப் பேப்பரில் ‘கவின்’ என கோணலாக எழுதப்பட்டிருந்தது. மூவரும் ஆச்சர்யமானார்கள்.‘‘எதுக்கு லயா என் பேரை எழுதி வைச்சிருக்க..?’’
‘‘அது வந்துப்பா...’’ என்றபடி கவினைக் கட்டிப்பிடித்தாள் லயா: ‘‘அன்னிக்கி அம்மாவுக்கு தலைவலிச்சப்ப ஆபீஸ்ல இருந்து
நீ  சீக்கிரமா வந்த... அம்மா பக்கத்துலயே இருந்து பார்த்துக்கிட்ட... அம்மாவுக்கும் சரியாச்சு...’’

‘‘அதுக்கு..?’’ கேட்டபடி அருகில் வந்தாள் மிருதுளா.உடனே தன் மறுகையால் அம்மாவையும் அணைத்தாள் லயா: ‘‘நேத்து அப்பா ஊர்ல இல்ல...

நீ தலைவலில அழுத... அப்பா பக்கத்துல இருந்தா உனக்கு சரியாகிடும்னு நினைச்சேன்... அப்பா பேரை எழுதி வைச்சேன்...’’
கவினும் மிருதுளாவும் நெகிழ்ச்சியுடன் லயாவை முத்தமிட...வழியும் கண்ணீருடன் தன் தங்கையைப் பார்த்தபடி இருந்தாள் தியா.

நடிகைனா... ச்சும்மாவா!

தனது மொபைல் நெட் ஒர்க்கின் சர்வீஸ் மோசம் எனவும், பில் அதிகம் வருகிறது எனவும் டுவிட்டரில் புகார் தெரிவித்தார் பூஜா ஹெக்டே.
இமேஜ் சரியும் என்பதால் அதிர்ந்து போன செல்போன் நிறுவனம், உடனே பூஜாவின் கனெக்‌ஷனை சரிசெய்த
துடன், பில்லையும் சரிபார்த்துக் கொடுத்துவிட, சந்தோஷத்தில் புன்னகைக்கிறார் பூஜா.

சீரியல் டூ சினிமா

‘தெய்வமகள்’ சீரியலில் சத்யாவாக கலக்கிய வாணி போஜன், பெரிய திரைக்கு வந்துவிட்டார். டோலிவுட்டில் ‘மீக்கு மாத்ரமே செப்தா’வில் அறிமுகமானவர், கோலிவுட்டிலும் என்ட்ரி ஆகிறார். அசோக்செல்வனின் ‘ஓ மை கடவுளே’க்குப் பிறகு வெங்கட்பிரபு நடிக்கும் ‘லாக்கப்’, ‘மிஸ்டர் டபிள்யூ’ தவிர அதர்வாவின் படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.

ராஜாவை சந்தித்த ராணி

‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கை ‘லட்சுமி பாம்’ என்ற பெயரில் இயக்கி வரும் ராகவா லாரன்ஸை, அவரது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்று வாழ்த்தியிருக்கிறார் வேதிகா. அங்கே அக்‌ஷய்குமாரை சந்தித்ததில், பொண்ணு செம ஹேப்பி. ‘‘Met the king of content in the truest sense!! He is redefining Indian cinema with every film he does.. Akshay sir, you are truly inspiration personified...’’ என்று சிலிர்க்கிறார் வேதிகா.

ராம்பிரகாஷ் ராஜேஷ்குமார்